உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால் நமக்குத் 8 தெரிந்த வரையில் திரு.பொன்னவைக்கோ அவர்கள் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் இயக்குநராகத்தான் இருந்தாரே தவிர துணைவேந்தராக இதுவரை நியமிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தி.மு.கழக ஆட்சி இருந்த காலத்திலிருந்து தமிழ் இணையப் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தராக யாரையும் நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க. ஆட்சியில்கூட முனைவர் பொன்னவைக்கோ இயக்குநராகப் பணியாற்றினாரே அல்லாமல், வேந்தராக நியமிக்கப்பட்டதாக கண்டிருக்கமாட்டார். இந்த ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டதின் அழகு இது. அவரே துணை கனவுகூட சரி, அது போகட்டும். அரசாணையில் 2003-2004ஆம் ஆண்டிலேயே அறிவியல் தமிழ்ப் பாடம் அமலுக்குவர ஏதுவாக அறிக்கையினை அளிக்குமென்று குறிப்பிடப்பட்டுள்ளதே, ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டு பல மாதங்கள் கழிந்த பிறகும் அதற்கான எந்த முயற்சியும் முளை விடக்கூட இல்லையே ? அரசாணையின் கதி இதுவென்றால், தமிழகச் சட்டப் பேரவையிலே கல்வி அமைச்சர் சொன்ன பதிலின் லட்சணம் என்ன என்பதையும், மத்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவிக்கவும், மத்திய ஆட்சி மொழியாக்கிடவும் வலியுறுத்தி நாம் இதுவரை எடுத்த தொடர் முயற்சிகள் பற்றியும் நாளைய கடிதத்தில் எழுதுகிறேன். “முரசொலி” 25.10.2003 ய அன்புள்ள, மு.க.