உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 மறியல் அறப்போர் தீர்மான விளக்கம் (2) தடைக்கற்களைத் தாண்டி தமிழ் வளர்ப்போம்! தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு பள்ளிகளில் தமிழ் இடம் பெறுகிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு எத்தனை விதமான பள்ளிகள் நடைபெறுகின்றன என்பதை விளக்கிடுகிறேன். மாநில அரசுப் பாடத்திட்டப் பள்ளிகள் மழலையர் பள்ளிகள் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சி.பி.எஸ்.சி., என்று கூறப்படும் மத்திய அரசுப் பாடத் திட்டப் பள்ளிகள் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஐ.எஸ்.சி.ஈ., (International School Certificate Examination) ஓ.எஸ்.எல்.சி., (Oriental School Leaving Certificate) இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான பாடத்திட்ட முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. மாநில அரசு பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பள்ளிகள் என்று பார்க்குமிடத்து, அரசுப் பள்ளிகள்; அரசிடம் நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகள்;