உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 அரசிடம் நிதி உதவி பெறாத ஆனால் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் வகைப்பட்ட பள்ளிகளிலேதான் இந்த மூன்று தமிழகத்திலே பெரும்பாலான மாணவர்கள் மாநில அரசின் பாடத் திட்ட முறையிலே கல்வி பயின்று வருகிறார்கள். இந்தப் பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகள் ஐந்தாம் வகுப்பு வரையிலும், நடுநிலைப் பள்ளிகள் எட்டாம் வகுப்பு வரையிலும், உயர்நிலைப் பள்ளிகள் பத்தாம் வகுப்பு வரையிலும், மேல்நிலைப் பள்ளிகள் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் மாணவர்கள் பயிலுகிறார்கள். தனியாரால் நடத்தப்படும் Nursery and Primary Schoolகளைப் பொறுத்தவரை அங்கே ஆங்கிலத்திலேதான் நடத்தப்படுகின்றன. அ அனைத்தும் அதுபோலவே தனியாரால் நடத்தப்படும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் ஆங்கிலத்திலே மட்டும் அனைத்து பாடங்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளைப் பொறுத்தவரை அங்கேயும் அனைத்துமே ஆங்கிலம்தான். 1973இல் தமிழ்நாட்டில் 33 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மட்டுமே இருந்தன. தற்போது 2003இல் மொத்தம் 3450 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன. மக்களுக்கு ஆங்கில மொழியின்பால் ஏற்பட்ட மோகம் காரணமாகவும், வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற தவறான கணிப்பின் அடிப்படையிலும் இப்பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆர்வமாகச் சேர்த்தனர். 2002-2003ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரப்படி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிலுவோர் 14 லட்சத்து 51 ஆயிரம்; மத்திய அரசுப் பள்ளிகளில் பயிலுவோர்