உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 ஒரு லட்சத்து 16 ஆயிரம்; ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் பயிலுவோர் 54 ஆயிரம். அடுத்து, துவக்கப்பள்ளி முதல் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திலும், அது அரசினால் நடத்தப்பட்டாலும், உதவி பெற்று தனியாரால் நடத்தப்பட்டாலும், உதவி பெறாமலே தனியாரால் நடத்தப்பட்டாலும் அங்கெல்லாம் பயிற்று மொழி தமிழ் அல்லது தாய்மொழி. இதுதான் இன்றைய நிலை. 2002-2003ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரப்படி தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 25 லட்சத்து 63 ஆயிரம் ஆகும். இதிலே தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 9 இலட்சத்து 42 ஆயிரமாகும். ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 21 ஆயிரம். அதாவது 125 லட்சம் மாணவர்களில் 16 லட்சம் மாணவர்கள்தான் தமிழைப் பயிற்று மொழியாகக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களும் தமிழறிவுப் பெற்றவர்களாக விளங்கிட வேண்டும் என்பதுதான் தமிழ் உணர்வாளர்களின் விருப்பம். 2003-2004ஆம் ஆண்டிற்கான ஜெயலலிதா ஆட்சியின் கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் 4-4-2003 அன்று நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை சார்பில் பேசிய திரு. வள்ளல்பெருமான், அரசு ஆணை 56இன் மூலமாக தமிழ் மீடியம் வகுப்புகளை மூடவும், ஆங்கில மீடியத்திற்கு ணையாக