உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தமிழ்மீடியம் கோரிக்கைகள் ஏதாவது வந்தால் அதைத் தடுக்கவும் வழி வகுத்திருக்கிறார்கள்" என்ற ஒரு புகாரை அரசாங்கத்தின் மீது சுமத்தியபோது, பேரவைத் தலைவர் திரு. காளிமுத்து; எந்த ஆண்டு இந்த ஆ ணை பிறப்பிக்கப்பட்டது என்று வள்ளல்பெருமானிடம் கேட்டார். ஆனால் அதற்கு வள்ளல்பெருமான் பதில் கூறுவதற்கு முன்பாக, கல்வி அமைச்சர் திரு. செம்மலை குறுக்கிட்டு, ல "மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, அந்த அரசாணை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியிலே போடப்பட்டது. இதிலிருந்தே திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு தமிழ் மீது எவ்வளவு அக்கறை இருந்தது என்பது புலனாகிறது" என்று ஆளுங்கட்சியினரின் பலத்த கரவொலிக்கிடையே பதிலளித்தார். சட்டப் பேரவையிலே அமைச்சர் தெரிவித்த இந்தப் பதில் சரிதானா? அவையில் தவறான தகவல் தந்தால் அது உரிமைப் பிரச்சினைக்கு உரிய ஒன்றாகும்; ஜனநாயக முறைப்படி நடக்கும் பேரவையில்! அமைச்சர் அவையிலே தெரிவித்த பதில் உண்மைதானா? உண்மை இதோ ஒளி விடுகிறது! வள்ளல்பெருமான் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி சுட்டிக்காட்டிய அரசாணை எண். 56 என்பது, 12-9-2002 அன்று ஜெயலலிதாவின் அ.தி.மு.க. ஆட்சியிலே பிறப்பிக்கப் பட்டதாகும். அதை அப்படியே புரட்டி, தி.மு.க. ஆட்சியிலேதான் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக பேரவையிலே கல்வி அமைச்சரே கூறினார். அந்த அரசாணையிலே மேலும் கூறப்பட்டிருப்பது என்னவென்று தெரியுமா ?