உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 "சில மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலே ஏற்கனவே தமிழ் வழி கல்விப் பிரிவுகள் தொடங்கப்பட்டிருப்பதால், அவற்றைப் படிப்படியாக மூடுவதற்கான நடவடிக்கைகளை மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் எடுக்க வேண்டுமென்று அரசாங்கம் அறிவுறுத்துகிறது. எதிர்காலத்திலும் இணையாக தமிழ் வழிக் கல்விப் பிரிவுகளை மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலே தொடங்கவேண்டுமென்ற வேண்டுகோள் வந்தால் அவற்றை மறுத்திட வேண்டும்' உடன்பிறப்பே; பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்பது அ.தி.மு.க. அரசின் மேற்கண்ட ஆணையின் மூலமாக அம்பலமாகிறது அல்லவா? ஆனால் இதற்கு மாறாக, தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் தமிழ்வழிக் கல்விக்காக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை தெளிவாக்குகிறேன். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் 28-8-1997 அன்று தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தில், மாணவர்கள் தங்கள் இளம்வயதில் தாய்மொழியிலே படிப்பதன் மூலம் எந்த அளவிற்குப் பயன் பெறுவார்கள் என்பதை பள்ளிகளின் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தும்படி பணிக்கப்பட்டார்கள். 27-11-1998இல் அரசாணை எண். 421இன்படி அனைத்து நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளில் தமிழைப் பயிற்றுமொழியாக அறிமுகப்படுத்த வேண்டுமென்று அறிவிக்கப்பட்டது. அதனை அமல்படுத்துவோருக்கு பதிவுக் கட்டணம் போன்றவற்றில் 50 சதவிகித சலுகையும் அறிவிக்கப்பட்டது. 13-1-1999இல் அரசாணை எண். 6இன்படி தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு நடத்திடும் நர்சரி மற்றும்