உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மழலையர் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் கணக்கு, விஞ்ஞானம், சமூகவியல் ஆகிய மூன்றில் இரண்டு பாடங்களை தமிழிலே நடத்தும் பள்ளிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் புதுப்பிக்கப்படும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து பல சங்கங்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். உ வழக்கு விசாரணையில் இருக்கும்போதே; 3-5-1999இல் அரசாணை எண். 117இன்படி கழக அரசு நீதிபதி எஸ். மோகன் அவர்கள் தலைமையில் நான்கு உறுப்பினர்கள் கொண்ட குழு ன்றை, நர்சரி வகுப்பு முதற்கொண்டு உயர்நிலைப் படிப்பு வரை தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டுவரவேண்டு மென்று தமிழ்ச் சான்றோர்கள் கொடுத்த கோரிக்கையைப் பரிசீலிப்பதற்காக நியமித்தது. உயர்நீதி மன்றம் 7-6-1999 அன்று அளித்த தீர்ப்பில் அரசாணை செல்லும் என்று தெரிவித்ததோடு, தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராத மாணவர்களுக்கு அந்த ஆணை பொருந்தாது என்றும் தீர்ப்பளித்தது. நீதிபதி எஸ். மோகன் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் 19-11-1999 அன்று அரசாணை எண். 324 பிறப்பிக்கப்பட்டது. அதன்படி (1) அரசின் பயிற்று மொழிக் கொள்கை குறித்து வெளியிடப்பட்ட அரசாணைகள் செல்லும் என நீதி மன்றங்களால் முடிவு செய்யப்பட்டுள்ளதால், அரசாங்கத்தின் மொழிக் கொள்கைகள் பற்றிய ஆணைகள் தொடர்ந்து அரசாணைகள் மூலமே அறிவிக்கப்படும். (2) அனைத்துப் பள்ளிகளிலும் (மெட்ரிகுலேஷன், அரசுப் பள்ளிகள், உதவி பெறும், உதவி பெறாத அங்கீகாரம்