உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 மறியல் அறப்போர் தீர்மான விளக்கம் (3) G மத்திய ஆட்சி மொழி செம்மொழி - மாறன் தீர்மானம்! - சிலவற்றை திரும்பத் திரும்ப நினைவுபடுத்தி எழுதிக்கொண்டோ, பேசிக்கொண்டோ இருந்தால்தான் அவற்றுக்கான மக்கள் எழுச்சியை உருவாக்க முடியும் என்பதுடன்; அவற்றைக் குறித்து மெத்தனப்போக்கைக் கடைப்பிடித்து வருகிற அரசினரின் கவனத்தையும் திருப்பி; வெற்றி காணமுடியும் என்பதால்; மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழையும் ஆக்கவேண்டும் என்றும், தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை நீண்டகாலமாக வலியுறுத்திக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறோம். - - - - தி.மு. கழகத்தின் மாநாடுகளில் தீர்மான வடிவில் நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் எடுத்துக் கூறியுள்ள நிலையில் இந்தியப் பிரதமருக்கு தி.மு.க. ஆட்சி வாயிலாகவும் கழகச் சார்பிலும் கடிதங்கள் மூலமாக தொடர்ந்து வற்புறுத்தி வருகிற இந்தக் கோரிக்கை குறித்து விழுப்புரம் மாநாட்டில்தான் என்றல்ல; 1996ஆம் ஆண்டு ஜனவரி 26, 27, 28 ஆகிய நாட்களில் திருச்சியில் என்னுடைய தலைமையில் நடைபெற்ற மாநில மாநாட்டில், நான் நிறைவுரை ஆற்றுவதற்கு முன்பு தம்பி முரசொலி மாறன் சிறப்புத் தீர்மானம் ஒன்றை முன்மொழிய, அந்தத் தீர்மானத் தினை கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் வழி மொழிந்தார். அந்தச் சிறப்புத் தீர்மானம் வருமாறு :-