உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ய - “இந்தி பேசாத மக்கள் விரும்புகின்ற காலம்வரை மத்திய ஆட்சி மொழியாக ஆங்கிலம் நீடிக்கும்; பிறமொழி மக்கள் மீது இந்தி திணிக்கப்படமாட்டாது” என்னும் நேருவின் வாக்குறுதி தொடர்ந்து மீறப்படுகிறது. மத்திய அரசின் மக்கள் தொடர்பு (Mass Media) துறைகளான தொலைக்காட்சி வானொலி ஆகியவற்றில் இந்தி ஆதிக்கம் வளர்க்கப்படுகிறது. பிற மொழி மாநிலங்களில் உள்ள மைய அரசு அலுவலகங்களில் இந்தித்திணிப்பு தொடர்கிறது. இந்நிலையில் அனைத்து மாநிலங்களின் ஆட்சி மொழிகளும் (all the official languages of the States) மைய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவது ஒன்றுதான் இதற்குத் தீர்வு என்று தி.மு.கழகம் கருதுகிறது. அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்குவது உடனடியாக இயலாது என்று மைய அரசு கருதுமாயின் முதல் கட்டமாக இந்தியுடன் தொடர்பற்ற திராவிடக் குடும்ப மொழிகளில் ஒன்றான, இலக்கியப் பண்பாட்டு வளம் நிறைந்த தமிழ் மொழியையும் உடனடியாக இந்தியாவின் ஆட்சிமொழியாக ஏற்க வேண்டும் என்றும்; அதற்கேற்ப அரசமைப்புச் சட்டம், ஆட்சி மொழிச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது. 1996ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற அந்த மாநாடு வரை, தி.மு. கழகம் என்ன சொல்லி வந்தது என்றால், அரசியல் சட்டத்தின் 8வது அட்டவணையில் இருக்கின்ற மொழிகளை மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்குங்கள் என்பதாகும். அதனை மாற்றி திருச்சி மாநில மாநாட்டில் மாநிலங்களின் ஆட்சி மொழிகளை இந்தியாவின் ஆட்சி மொழிகளாக ஆக்குங்கள் என்று கேட்டுத் தீர்மானம் நிறைவேற்றினோம். சின்னஞ்சிறிய சுவிட்சர்லாந்தில் 3 மொழிகளும், பெல்ஜியம் நாட்டிலே 2 மொழிகளும் ஆட்சி மொழிகளாக