உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 இருக்கின்றன. கனடாவில் 10 மாநிலங்கள். அங்கே பிரெஞ்சு மொழி பேசப்படுவது கியூபெக் என்ற ஒரு மாநிலத்தில்தான். அங்கே ஆட்சி மொழிகள் எது என்று கேட்டால் ஆங்கிலமும், பிரெஞ்சு மொழியும் ஆகும். இலங்கையிலே தமிழ் ஆட்சி மொழி. சிங்கப்பூரில் தமிழ் ஓர் ஆட்சி மொழி. மலேசியாவில் தமிழ் ஆட்சி மொழி. திருச்சி மாநில மாநாட்டுக்கு முன்பே 1965ஆம் ஆண்டு மாநிலங்களவையில் அறிஞர் அண்ணா அவர்கள் மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்பது பற்றிப் பேசியது, நம் நெஞ்சில் என்றும் அழியாத ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இதோ மாநிலங்களவையில் அண்ணா முழங்கியதைக் கேட்போம்:- “மிகத் - தொன்மையான மொழியான தமிழை - தாய் மொழியாக நான் பெற்றிருக்கிறேன் என்பதை நான் மறந்துவிட முடியாது. எனது முன்னோர்கள் பேசிய அந்த மொழி எமது கவிஞர்கள் அரும்பெரும் அறிவுரைகளையும், தத்துவங்களையும் யாத்துக் கொடுத்த அந்த மொழி அள்ள, அள்ளக் குறையாத அறிவுக் களஞ்சியங்களும், காவியங்களும், இலக்கியங்களும் நிறைந்த அந்த மொழி - அதுதான் எமது தமிழ் மொழி - அம்மொழி இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக உரிய இடத்தைப் பெறும்வரை நான் ஒரு போதும் திருப்தியடையமாட்டேன். அநீதி இழைக்கப் படாமல் இருப்பதற்காக என்னுடைய மொழியாகிய தமிழ் மொழியை ஆட்சி மொழி ஆக்குக. அதுவரையில் ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்கட்டும். உயர் தனிச் செம்மொழியாகிய தமிழ் என் தாய்மொழி என்ற பெருமிதம் எனக்கு இருக்கிறது. அந்தத் தமிழ் மொழி மற்ற எந்தமொழிக்கும் தாழாத வகையில் ஆட்சிமொழி என்ற தகுதி தரப்படும் வரை நான் அமைதி பெறமாட்டேன்."