உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கரந்தை தமிழ்ச் சங்கம், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1919லும், 1920லும் இதேபோன்ற தீர்மானங்களை நிறைவேற்றியது. இந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் நாளன்று தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளின் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் வாஜ்பய் அவர்களைச் சந்தித்து தமிழைச் செவ்வியல் மொழியாக அறிவிக்க வேண்டுமென்று கோரி மனு கொடுத்தனர். நான் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோதும், எதிர்க் கட்சியிலே ரு க்கின்றபோதும் இந்தக் கோரிக்கைக்காக பிரதமருக்கு பல கடிதங்கள் எழுதியிருக்கின்றேன். தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ச் சான்றோர்கள், புலவர் பெருமக்கள் டெல்லியில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் நாள் நாடாளுமன்றம் முன்பாக தமிழ் மொழியை செவ்வியல் மொழியாக அறிவிக்கக் கோரி பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். டெல்லியில் நடந்த அந்த உண்ணாவிரதத்தை தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஆதரித்துள்ளன. நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் திங்களில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதிக்கப்பட்டபோது பேசிய மத்திய அமைச்சர் தம்பி டி.ஆர். பாலு, இந்தக் கோரிக்கை குறித்து வலியுறுத்திக் கூறியிருக்கிறார். தமிழ் செவ்வியல் மொழியாக ஆக்கப்படுவதால் தமிழகத்திற்கு என்னென்ன பயன்கள் ஏற்படும் என்பதையும் விளக்கிட விரும்புகிறேன். மத்திய அரசு தமிழை செம்மொழி என்று அறிவித்தால் உடனடியாக இந்தியப் பல்கலைக் கழக மானியக் குழு அதனை