உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 உலகத்திலே உள்ள முக்கியமான மொழிகள் என்று எடுத்துக்கொண்டால் சுமார் 600 மொழிகள் இருக்கின்றன. அதிலே இலக்கிய, இலக்கணம் உடைய மொழிகள் சுமார் 300. இதிலே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை உடைய மொழிகள் ஆறு. அவை தமிழ், சீனம், சமஸ்கிருதம், லத்தீன், ஹிப்ரூ, கிரீக். இதிலே லத்தீனும், ஹிப்ரூவும் செத்துப்போன மொழிகள். இஸ்ரேல் அரசாங்கம் ஹிப்ரூ வுக்கு உயிரூட்டும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறது. கிரீக் மொழி தற்போது புது வாழ்வு பெற்று வருகிறது. சமஸ்கிருதத்துக்கு என்றுமே பேச்சு வழக்கு இருந்ததில்லை, எழுத்து வழக்கு மட்டுமே. தி.மு.கழக ஆட்சியில் இதுகுறித்து கருத்து அறிவிக்க திருவாளர்கள் அகத்தியலிங்கம், வ.செ. குழந்தைசாமி, பொற்கோ, ஜான் சாமுவேல், மணவை முஸ்தபா ஆகியோரைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழுவின் கருத்துரையைப் பெற்று அது மத்திய அரசுக்கும் அனுப்பப் பட்டது. மத்தியஅரசு அந்தக் கருத்துரையை மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திற்கு அனுப்பியது. அந்த நடுவண் நிறுவனம் தமிழைச் செவ்வியல் மொழியாக அறிவிக்கலாம் என்ற பரிந்துரையுடன் அந்தக் கருத்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியது. 1998இல் சென்னைப் பல்கலைக் கழகமும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகமும், கழக ஆட்சிக் காலத்தில், தமிழ், செவ்வியல் மொழி என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்கள். இன்னும் சொல்லப் போனால் 1918ஆம் 1918ஆம் ஆண்டில் சென்னையில் சைவ சித்தாந்த மகா சமாஜம் நடத்திய மாநாட்டிலேயே தமிழைச் செவ்வியல் மொழியாக அறிவிக்கவேண்டுமென்று