உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நிலையில் தமிழ் மொழியை மையப்படுத்தி உண்மையான வரலாற்று பண்பாட்டுக் கருத்துகள் வெளிவர முடியும். அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு வேக மூட்டும் வகையில் மேலும் பல திட்டங்கள் வகுத்துச் செயல்பட வாய்ப்பு ஏற்படும். இந்திய மொழிகளில் மட்டும் அல்லாது ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளில் தமிழ் இலக்கியங்களும், நவீன படைப்புகளும் மொழி பெயர்க்கப்பட்டு உலகெங்கும் பரவும். எனவே மொழிப் பிரச்சினையிலே உள்ள விரிவாக பல்வேறு குறிப்புகளை இந்தக் கடிதங்களில் விளக்கியிருக்கிறேன். டிசம்பர் 1ந்தேதி மத்திய- மாநில அரசு அலுவலகங்களின் முன்னால் மறியல் அறப்போர் எதற்காக என்பதை பொதுக்கூட்டங்களில் விளக்கும் கழகச் சொற்பொழிவாளர்கள் இந்தக் குறிப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். முக்கிய குறிப்பு - மாவட்ட அளவிலோ அல்லது மாநில அளவிலோ கழக ளைஞர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி ஆகிய அணிகளின் அமைப்பு நிர்வாகிகள் கொண்ட கருத்தரங்குகளை கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் முன்னின்று நடத்துவதும் அவற்றில் இயன்ற அளவு கழகச் சொற் பொழிவாளர்கள் கலந்து கொள்வதும் பயனுடையதாக இருக்கும். மொழிப்பிரச்சினையில் முழுமையான விபரங்களைப் பெற்றிடவும் உதவும். “முரசொலி’’ 27.10.2003 அன்புள்ள, மு.க.