உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 மறியல் அறப்போர் தீர்மான விளக்கம் (4) நடப்பவையாவது நல்லவையாக இருக்கட்டும் ! டிசம்பர் 1ஆம் நாள் மத்திய மாநில அரசு அலுவலகங்களின் முன்னால் தி.மு.க. நடத்த இருக்கின்ற மறியல் அறப்போராட்டத்திற்குக் காரணமாக அமைகிற தீர்மானங்களில் ஒன்று காவிரிப் பிரச்சினை குறித்ததாகும். காவிரிப் பிரச்சினைக்கு இன்றைக்கு வயது 35. 1968இல் அண்ணா முதல்வராக இருந்தபோது இந்தப் பிரச்சினைக்காக தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தை, அங்கும் இங்கும் மத்திய மாநில ஆட்சிகள் மாறி மாறி வந்த போதிலும் இன்னும் முற்றாக முடிந்தபாடில்லை. ல - ய கர்நாடக அரசு அங்குள்ள எல்லா எதிர்க் கட்சிகளையும் அரவணைத்து ஆதரவு பெற்று அந்தக் கட்சிகளையும் கட்சித்தலைவர்களையும் மதிக்கக் கற்றுக் கொண்டு; ஒரேகுரலில் அந்தப் பிரச்சினையில் ஒற்றுமையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்க; இங்கே மட்டும் ஜெயலலிதா எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஏட்டிக்குப் போட்டியாக நடந்துகொண்டும் - ஆட்சியில் இருக்கும்போது ஏனோதானோ வென்று செயல்பட்டும்; காவிரிப் பிரச்சினையில் பெருங்குழப்பத்தையே உருவாக்கிக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சிகளை, குறிப்பாகத் தி.மு.கழகத்தை பொறுப்பற்ற முறையில் பொல்லாங்கு கூறி குற்றம் சாட்டுவதே; ஜெயலலிதா காவிரிப் பிரச்சினையில் நடத்தும் கைங்கர்யமாக இருந்து வருகிறது.