உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நேற்றையதினம் நடந்த அரசியல்(?) அரசுவிழா ஒன்றில்கூட "இவர்கள் ஆட்சி நடத்துவார்கள், எதிர்க் கட்சிக்காரர்கள் சென்று காவிரித் தண்ணீரைக் கொண்டு வரவேண்டுமா? என்பது கருணாநிதியின் கேள்வி. அப்படியானால் இவரிடம் ஆட்சிப் பொறுப்பை கொடுத்தால்தான் தண்ணீரைக் கொண்டு வருவாரா ? இல்லையென்றால் அதைப் பற்றிப் பேசக்கூட மாட்டார்" என்று இந்த அம்மையார் நஞ்சை குலுங்கி அழும் தஞ்சையில் பேசியிருக்கிறார். சென்னைக்கு தம்பி முரசொலிமாறன் உடல்நிலை விசாரிக்க மருத்துவமனைக்கு வந்த பிரதமர் வாஜ்பயிடம் நான் முக்கியமாக வைத்த கோரிக்கையே காவேரி ஆணையத்தை உடனே கூட்டுங்கள் என்பதுதான். அந்தக் கோரிக்கையை நான் வைத்த போது; பிரதமரைச் சந்திப்பதைப் புறக்கணித்து குளுகுளு ஊட்டிக்குப் போயிருந்த ஜெயலலிதாவுக்கு; இப்போது தஞ்சையில் போய் இப்படிப் பேச எந்தத் தகுதியும் கிடையாது. இதுபோன்ற முக்கிய பிரச்சினைகள், பொதுப் பிரச்சினைகள் என்பதும் ஆளுங்கட்சிதான் முன் நின்று முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்பதும் ஆட்சி நிர்வாகத்தின் அரிச்சுவடி படித்தவர்கள்கூட அறிந்த உண்மை யாகும். ஆனால்; ஆடத்தெரியாதவர்கள் மேடையைக் குறை சொல்வது போல ஆட்சி செய்யத் தெரியாத ஜெயலலிதா அடுத்துள்ள மாநிலங்களுடன் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகளைக் கூட அறிந்து கொள்ளாமல்; ஆணவம் கொண்டு அலைவதால்; வளமார் தஞ்சைகூட இன்று வரட்சியின் பிடியில் சிக்கியது என்பதை தனது வாய் ஜாலத்தினால் மறைக்கப் பார்க்கிறார். அதுதான் அவரது நஞ்சுமிழும் தஞ்சைப் பேச்சாகும்.