உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 எதிர்க்கட்சியில் தி.மு.க. இருந்தாலும்; பிரதமரிடம் காவேரி ஆணையத்தைக் கூட்டுக என்று நான் கேட்ட பிறகுதான்; ஊட்டியிலிருந்த முதலமைச்சருக்கு தன் “டூட்டி” அது என்று புரிகிறது. பிறகு அவரும் பிரதமருக்கு அங்கிருந்து ஒப்புக்குச் சப்பாணியாக ஒரு கடிதம் எழுதுகிறார்; காவேரி ஆணையத்தைக் கூட்டுக என்று! எதிர்க்கட்சிக்குள்ள அக்கறை ஆளுங்கட்சிக்குத் தாமதமாக வந்ததை சுட்டிக் காட்டினால்; அது ஒரு குறையா ? குற்றமா? இவருக்கு ஊட்டியில் டூட்டி! சென்னைக்கு வந்த கு பிரதமரைச் சந்திக்காமல்கூட அங்கே ஓடி விடுவார்; ஆணையத்தைக் கூட்டுக என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. அதை நான் சொன்னால் அதற்கு இவரது கேலி கிண்டலுக்கு ஒன்றும் குறைவில்லை. ய பலமுறை பேசி பயனளிக்காத காரணத்தால், இப்பிரச்சினைக்காக நடுவர் மன்றம் ஒன்றை மத்திய அரசு அமைத்திட வேண்டுமென்று முதல் கடிதம் எழுதப்பட்டதும், மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையிலே முதன் முதலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், 1989இல் வி.பி. சிங் பிரதமராக இருந்த போது நடுவர்மன்றம் கோரி மீண்டும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதும் கழக ஆட்சியிலேதான். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நடுவர் மன்றம் குறித்து மத்திய அரசின் கருத்தை நீதிமன்றம் கேட்டது. அது குறித்து பிரதமர் வி.பி. சிங் அவர்கள் தமிழக அரசின் கருத்தைக் கேட்டார். அப்போது பேச்சுவார்த்தை பயனில்லை, எனவே நடுவர் மன்றம்தான் தேவை என்று நாம் தெரிவித்த கருத்தை, பிரதமரும் ஏற்று நீதிமன்றத்திற்கு அதனைத் தெரிவித்த காரணத்தால் தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.