உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நடுவர் மன்றத்தில் இடைக்காலத் தீர்ப்பு ஒன்றினை அளித்திட வேண்டுமென்று கோரிக்கை வைத்ததும் கழக ஆட்சியில்தான். இடைக்காலத் தீர்ப்பு வழங்கிட தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நடுவர் மன்றம் தெரிவித்த போது, கழக ஆட்சியில் உச்ச நீதிமன்றத்தை அணுகி, இடைக்காலத் தீர்ப்பினை வழங்கலாம் என்று அனுமதியைப் பெற்றுத் தந்ததும் நாம்தான். அந்தத் தீர்ப்புக்குப் பிறகு ஐந்தாண்டு காலம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த ஜெயலலிதாவினால் அதன் பரிந்துரைகளை அமல்படுத்தச் செய்ய முடியவில்லை. அந்தத் தீர்ப்பை கர்நாடக அரசு ஏற்றுக் கொள்ளக்கூட வரவில்லை. முன் 1996இல் மீண்டும் தி.மு.கழக அரசு ஏற்பட்ட பிறகுதான் பிரதமரை பல முறை வலியுறுத்திய காரணத்தால் 1998ஆம் ஆண்டு காவேரி பிரச்சினையில் ஒரு ஒப்பந்தம் காணப்பட்டது. அப்போதுதான் கர்நாடக அரசு, நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. காவேரி ஆணையம் என்ற ஓர் அமைப்பே அப்போதுதான் ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் எல்லாம் அந்த ஒப்பந்தத்தை வரவேற்றன. ஏடுகள் பாராட்டி தலையங்கங்கள் எழுதின. ஆனால், அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையின் தொடக்கமே, "The Cauvery River Authority headed by the Prime Minister is a very big fraud perpetrated on the farmers of the Cauvery delta in Tamil Nadu" என்பதாகும். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையிலே காவேரி ஆணையம் என்பது பல் இல்லாத ஆணையம் என்றும், செயல்பட இயலாத வாரியம் என்றும் விமர்சித்தார். அதன்பிறகு அந்த ஆணையக் கூட்டங்களில்