உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 தமிழ்நாடு அரசு கலந்து கொள்ளாது என்றார். பிறகு அவரே சென்று கலந்துகொண்டு கூட்டத்திற்கு நடுவே வெளிநடப்பு செய்தார். காவேரி நீரை நமக்குத் தர வேண்டிய பொறுப்பிலே உள்ள கர்நாடக அரசின் முதல்வரையும் அமைச்சர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்கி விமர்சித்தார். இத்தகைய பொறுப்பற்ற காட்டுக் கூச்சல்களை பொருட்படுத்தாமல்; காவேரி பிரச்சினையிலே கழக அரசும், கழகமும் எந்தெந்த அளவிற்கு முயற்சிகளை மேற்கொள்ள முடியுமோ அத்தனை முயற்சிகளையும் எடுத்துள்ளது. அந்த வகையில் ஜெயலலிதா அரசு எப்படி முரண்பாடாகச் செயற்பட்டாலும், மத்திய அரசும், குறிப்பாக காவேரி ஆணையத்தின் தலைவராக இருக்கின்ற பிரதமர் வாஜ்பய் அவர்களும் தமிழ்நாட்டிலே உள்ள காவேரி டெல்டா விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் வளம் சேர்த்திட இந்தப் பிரச்சினையிலே ஒரு நல்ல தீர்வு ஏற்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும். அடுத்து, தமிழக வாணிபம் செழிக்க, பொருளாதார வளம் பெருகிட, சேது சமுத்திரத் திட்டப் பணிகளை விரைவுபடுத்துக என்பது விழுப்புரம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம். 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் பொறுப்பில் இருந்த போதே 23-7-1967 அன்று எழுச்சி நாள் நடத்தி, சேலம் இரும்பாலை, தூத்துக்குடி துறைமுகம் முதலியவற்றை மத்திய அரசு நிறைவேற்றக் கோரிக்கை வைத்தார். அந்தத் திட்டங்களின் வரிசையில் ஒன்றுதான் சேது கால்வாய்த் திட்டம். பாக். ஜலசந்தியையும், மன்னார் விரிகுடாவையும் இணைத்து ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்படும் கால்வாய்தான் சேது கால்வாய் திட்டம்.