உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 இயல்பாகவே முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு தொழிலாளர்கள் என்றாலும், அரசு அலுவலர்கள் என்றாலும் ஓர் 'அலர்ஜி'. 25-7-2001 அன்றே, அதாவது ஜெயலலிதா பதவிக்கு வந்த சில நாட்களிலேயே அரசின் மொத்த வருமானத்தில் 94 சதவிகிதம் அரசு அலுவலர்களின் ஊதியமாக வழங்கப்படுகின்றது என்றார். தமிழக அரசின் மொத்த வருவாயில் 2000-2001இல் 47.50 விழுக்காடும், 2001-2002இல் 46.37 விழுக்காடும், 2002-2003இல் 43.82 விழுக்காடும்தான் அரசு அலுவலர்களின் ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றுக்காக செலவாயிற்று. பலமுறை வேண்டுகோள்கள், சந்தித்துப் பேசுவதற்கான முயற்சிகள், ஏடுகள் வாயிலாக அறிக்கைகள் என்பனவற்றுக்குப் பிறகே அரசு அலுவலர்களுக்கான அனைத்துச் சங்கங்களும் சேர்ந்து 2-7-2003 அன்று முதல் வேலை நிறுத்தம் என்று அறிவித்தன. ஆனால் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அரசு அலுவலர்கள் எல்லாம் காவல் துறையினரால் வேட்டையாடப்பட்டார்கள். இலை ஜ 4ந்தேதியன்று எஸ்மா சட்டத்தில் திருத்தம் செய்து டெஸ்மா அவசரச் சட்டம் 23-4-2003ஆம் தேதியிலிருந்தே அமலுக்கு வந்ததாக அறிவித்து, ஒரு இலட்சத்து எழுபதாயிரம் பேரை டிஸ்மிஸ் செய்தார்கள். இலட்சம் பேருக்கு மேற்பட்ட அரசு அலுவலர்களை ஒரேநேரத்தில் டிஸ்மிஸ் செய்த கொடுமை எங்கேயாவது நடைபெற்றதுண்டா? தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தையும், அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளையும் எதிர்த்து தொ.மு.ச. உள்ளிட்ட பல தொழிற் சங்கங்கள் உயர்நீதி மன்றத்திலும் பிறகு உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்தன. தொழிலாளர்களுக்கு அரசியல் சாசனச் சட்டம் .