உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 , நெல்-கரும்பு விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், அரசுஅலுவலர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பல பிரிவினரின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் பல இருக்கும்போது, நிதிப் பற்றாக்குறை எனக் கூறிக்கொண்டே பல கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம், 18 ஆயிரம் கோடி ரூபாய்ச் செலவில் சென்னை புனர் நிர்மாணம் என்ற தொடர் அறிவிப்புகளை நிறுத்திக் கொள்க. மக்கள் வரிப் பணத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் எதிர்க் கட்சித் தலைவர்களை ஏசிப் பேசும் ஜனநாயக விரோதச் செயலுக்கு அணையிட்டுத் தடுத்திடுக. ஆளுங்கட்சியின் நிகழ்ச்சிகளை, விதிகளை மீறி நடத்திக் கொண்டு - அதே சமயம் விதிகளுக்கேற்ப நடத்த முன்வரும் எதிர்க்கட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து, நிபந்தனை விதித்து பேச்சுரிமை, எழுத்துரிமையைப் பறிப்பதையும் பத்திரிகைகள் மீது எண்ணற்ற வழக்குகள் தொடர்வதையும் நிறுத்திக் கொள்க. எனும் தீர்மானங்கள் அடங்கிய துண்டு அறிக்கை, பல்லாயிரக்கணக்கில் அச்சியற்றப்பட்டு கழக அமைப்புகளுக்கு தலைமைக் கழகச் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் நான் ஆற்றிய நிறைவுரையும் புத்தக வடிவில் இந்த விளக்கங்களைத் தாங்கி வெளியிடப்பட்டு; கழக முன்னணியினருக்கும், சொற்பொழிவாளர்களுக்கும் வழங்கப் பட்டுள்ளது. அறப்போராட்டத்திற்கான கூட்டங்களில் பிரச்சாரப் பொதுக் மக்கள் கள் மத்தியில் எடுத்து வைக்கப்பட வேண்டிய பிரச்சினைகளை வரைமுறைப்படுத்தவும் - வகைப் -