உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 கௌரவ ரேஷன் கார்டு என்ற பெயரால் ஒரு கோடியே 15 லட்சம் நடுத்தர மக்களை நடுத்தெருவுக்குத் துரத்தியுள்ள அநியாய ஆணையை திரும்பப் பெறுக! வணிகர்களை வாட்டும் பல முனை வரியை ரத்து செய்து; மீண்டும் ஒரு முனை வரியைக் கொண்டு வருக! சாலைப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், கூட்டுறவுப் பணியாளர் கள் என வேலை நீக்கம் செய்யப்பட்ட 40 ஆயிரம் பேரை மீண்டும் பணியில் அமர்த்துக! மத மாற்றத் தடைச் சட்டம் - அயோத்தியில் அதே இடத்தில் இராமர் கோயில் கட்டுவோம் என்ற திட்டவட்ட அறிவிப்பு - இவற்றைத் திரும்பப் பெற்றிடுக! ஆடு, கோழிகளை உண்பதற்கு அனுமதித்துவிட்டு, அவற்றை நேர்த்திக் கடனுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பழைய கலாச்சாரத்திற்கு எதிராக தலைவிரித்தாடும் தடையாணைகளை நிறுத்திக் கொள்க! ஒப்பந்தப் புள்ளிகள் ஊழல் புள்ளிகளாக உருவெடுத்துள்ளதையும், ஆளும் தரப்பினர் நடத்தும் மணல் திருட்டு போன்ற மாபெரும் பகல் கொள்ளைகளையும் உடனடியாக தடுத்து நிறுத்துக. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் நடுத்தர மக்கள் வீட்டுப் பிள்ளைகள் திணறித் தவிக்கும் அளவுக்கு கல்விக் கட்டணங்களை உயர்த்தி - இலவச பஸ் பாஸ் போன்ற சலுகைகளையும் ரத்து செய்துள்ளதை திரும்பப் பெற்றிடுக.