உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மறியல் அறப்போர் தீர்மான விளக்கம் (6) கள மேவிடத் தயாராகின்றனர் கழகக் கண்மணிகள்! இன்று நான் எழுதுவது; டிசம்பர் 1ஆம் தேதி கழகம் களமிறங்கி நடத்த இருக்கும் மத்திய மாநில அரசு அலுவலகங்களுக்கு முன்னால் மறியல் அறப்போருக்கான அடிப்படையாக நிறைவேற்றப்பட்டுள்ள விழுப்புரம் மாநாட்டுத் தீர்மானங்களைக் குறிப்பிடும் 6வது கடிதமாகும். தமிழ் ஆட்சி மொழி செம்மொழி; காவேரி ஆணையம்; - சேது சமுத்திரத் திட்டம்; பொடா - எஸ்மா டெஸ்மா சட்டங்கள்; - இவை பற்றி விளக்கக் கூட்டங்களில் நமது கழகச் சொற்பொழிவாளர்கள் இன்னும் பல விபரங்களை அறிந்து கொள்ளத்தக்க வகையில் ஐந்து கடிதங்கள் இதுவரையில் தொடர்ந்து எழுதியுள்ளேன். இவற்றையன்னியில், அரசுத் தொழில்கள், அரசு சார்புடைய தொழில்களைத் தனியார் வசம் ஒப்படைப் பதைக் கைவிடுக! தி.மு.க. ஆட்சியின் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தியதுடன், விவசாயிகளுக்கான லவச மின்சாரத் திட்டத்திலும் குழப்பங்களும், குளறுபடிகளும் செய்வதை உடனே நிறுத்திடுக!