உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதி இந்த வழக்குகளை டெஸ்மா அவசரச் சட்டத்தின் பிரிவுப்படி விசாரணை நடத்தக் கூடாது என்று தெரிவித்திருப்பதின் வாயிலாக டெஸ்மா சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் தெளிவாகின்றது. அதையும் மீறி அ.தி.மு.க. அரசு டெஸ்மா சட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பதாக அறிவித்திருப்பது குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையல்லவா ? அதனால்தான் பொடா மட்டுமல்ல; எஸ்மா, டெஸ்மா சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி, அதன் அடிப்படையில் டிசம்பர் 1ந்தேதி மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் முன்னால் மறியல் அறப்போர் நடத்துவதற்காக திட்டமிட்டுள்ளோம் என்பதையும் மக்களுக்கு விளக்கிட வேண்டுகிறேன். "முரசொலி" 29.10.2003 அன்புள்ள, மு.க.