உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஜெயலலிதா எதிர்க்கட்சியிலே இருந்தபோது தொழிலாளர்களைப் போராட்டத்தில் ஈடுபடும்படி கூறியதே கிடையாதா? போக்குவரத்து தொழிலாளர்களுக்கும், மின்வாரியத் தொழிலாளர்களுக்கும் தி.மு.கழக அரசு 20 சதவிகிதம் போனஸ் என்று அறிவித்தபோது 25 சதவிகிதம் தரவேண்டுமென்றும், இல்லாவிட்டால் அவர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள் என்றும் ஜெயலலிதா அறிவிக்கவில்லையா? தற்போது தி.மு.கழகம் கொடுத்த 20 சதவிகிதம் போனஸ் அல்ல; வெறும் 8.33 சதவிகித போனஸ் மட்டுமே கொடுப்பேன் என்று பிடிவாதம் காட்டும்போது தொழிலாளர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? பாவம்; இரண்டு ஆண்டுகளாக ஏற்றுக்கொண்டுதான் வருகிறார்கள் அதாவது குனிந்து குனிந்து குட்டுப்படுகிறார்கள். - உச்ச நீதிமன்றத்திலே தொ.மு.ச. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கிலே இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டபோது, "சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுகின்ற மூன்று ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் 6072 பணியாளர்களைப் பொறுத்த வழக்குகளை விசாரித்து ஒரு மாதத்தில் தீர்ப்பு கூற வேண்டும். அப்போது டெஸ்மா அவசரச் சட்டத்தின் பிரிவுப்படி அல்லாமல் அரசு ஊழியர்கள் நெறிமுறை விதிகளின்படிதான் விசாரணை நடத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு மாதம் முடிந்து எத்தனையோ நாட்களாகின்றன. இன்னும் வழக்குகள் முடிந்து தீர்ப்புகள் வழங்கப்படவில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை மீறுகின்ற வகையில் செயல்கள் இங்கே நடைபெறுகின்றன.