உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 ஜெயலலிதா அரசின் பிடிவாதமான இந்தப் பழி வாங்கும் போக்கு காரணமாக அரசு அலுவலர்கள் இதுவரை 25க்கு மேற்பட்டவர்கள் தங்கள் இன்னுயிரை பலி கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் இதுவரை முதல்வர் ஜெயலலிதாவிற்கு அரசுஅலுவலர்கள் பால் கருணை பிறக்கவில்லை. அரசு அலுவலர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் தவறு செய்யலாம். ஆனால் 95 சதவிகிதம் பேர் மாதந்தோறும் பெறுகின்ற ஊதி யத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள்தான். அந்தந்த மாதம் பெறுகின்ற ஊதியத்திலிருந்துதான் வீட்டு வாடகை, குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணம், வாழ்க்கையை நடத்துவதற்கான அத்தியாவசியச் செலவுகளுக்குக் கொடுக்க வேண்டும். நான்கு மாதமாக ஊதியமே கிடையாது என்று மறுக்கப்பட்ட நிலையில் அந்தக் குடும்பத்தினர் விடுகின்ற கண்ணீர் இந்த அரசை நிச்சயமாக சும்மாவிடாது என்பது மட்டும் நிச்சயம். "அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்" பற்றி அய்யன் வள்ளுவர் "கொடுங்கோன்மை என்ற அதிகாரத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இத்தனை னைக்கும் அந்த அரசு ஊழியர்கள் செய்த குற்றம் என்ன ? அரசு சொத்தைக் கொள்ளையடித்து கோடி கோடியாகச் சேர்த்துத் தோட்டம் துரவு வாங்கினார்களா? ஏற்கனவே தாங்கள் பெற்று வந்த சலுகைகளையும், உரிமைகளையும் மீண்டும் வேண்டு மென்று கோரிக்கை வைத்தார்கள். அதற்காகவா இந்தத் தண்டனை ? அவர்களுக்காகப் பாடுபடக் கூடிய சங்கத் தலைவர்களின் அறிவுறுத்தல்படி வேலை நிறுத்தத்திலே ஈடுபட்டார்கள்.