உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ஏதுவாக 1 முதல் 5 வகுப்புகளில் அறிவியல் தமிழ் பாடம் கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதா அரசின் இந்த அறிவிப்பு பரவலாக அனைவராலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதைப் போலத் தோற்றமளித்தாலும், அந்த அரசாணையினைப் பெற்று படிக்கும்போது நமக்குச் சில சந்தேகங்கள் எழுகின்றன. அந்தச் சந்தேகங் களாவன. அரசாணையின் முதல் பாரா வருமாறு :- “தமிழகத்தில் பள்ளிகளில் பின்பற்றப்படும் இரு மொழிக் கொள்கை கீழ்க்கண்டவாறு கடைப்பிடிக்கப்படுகிறது. பகுதி 'அ': வட்டார மொழி அல்லது வட்டார மொழியிலிருந்து மாறுபடும் போது தாய்மொழி. பகுதி 'ஆ': ஆங்கிலம் அல்லது இந்திய மொழியல்லாத பிறமொழி.” பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது 24-1-1968இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண். 105இல் உள்ள வார்த்தைகளைத் தான் அப்படியே குறிப்பிட்டு, அதே கொள்கைதான் தற்போதும் கடைப்பிடிக்கப் படுகிறது என்று ஜெயலலிதா அரசின் 21-4-2003 தேதியிட்ட அரசாணை தெரிவிக்கின்றது. ஆனால் தி.மு.கழக ஆட்சி இருந்தபோது 27-12-1999 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை 6T 600T. 354 60T LIL, 24-1-1968 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண். 105இல் உள்ள "வட்டார மொழி அல்லது தாய்மொழி" என்ற வார்த்தைகள் "தமிழ் அல்லது தாய்மொழி' என்று