பக்கம்:தீபம் யுகம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

னன், கோவை விஜயா பதிப்பகம் மு. வேலாயுதம் மற்றும் பல அன்பர்கள் ஆண்டுதோறும் சென்னையில் நா.பா. நினைவு நாள் (பல்வேறு இடையூறுகளுக்கிடையே) நடத்தி வருகின்றனர். இக்கூட்டத்தில் முதிய தலைமுறைப் படைப்பாளிகளும், இளைய தலைமுறை எழுத்தாளர்களும், இலக்கிய அபிமானிகளும் பங்கேற்று, 'தீபம்' ஆசிரியரின் சீரிய ஆளுமை பற்றியும், 'தீபம்' இதழின் முக்கிய சாதனைகள் பற்றியும் உரையாற்றுகின்றனர்; கட்டுரை படிக்கின்றனர். மதிப்பீடும் கருத்துப் பரிமாற்றமும் செய்கின்றனர்.

1960ஆம் ஆண்டு முதல் நா.பா.வின் இறுதி மூச்சு உள்ள வரையில், அவருக்கும் எனக்கும் இடையிலான மிக நெருங்கிய நேயப் பிணைப்புகள் குறித்து நன்கறிந்தவர்களில், அருமை நண்பர் அ. நா. பாலகிருஷ்ணனும் ஒருவர்.

'தீபம்' நா.பா.வின் பரந்த இதயத்தில் நீங்கா இடம் பெற்றவர்களில் இவர் மிக முக்கியமானவர். 'தீபம்' இலக்கியக் குடும்பத்தின் 'அச்சாணி' என்றும், 'பல் சக்கரம்' என்றும் இவரை வர்ணிக்கலாம். தன்னலமற்ற தமிழ் இலக்கியத் தொண்டர்களுக்கு அ.நா.பா. ஓர் அரிய எடுத்துக்காட்டு.

சென்னையில் ஞானியார் அடிகள் தமிழ் மன்றம் செயலர் இவர். அந்த அமைப்பின் சார்பில், ஆண்டுதோறும் இவர் நா.பா. நினைவு நாளைக் கொண்டாடுவதில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயலாற்றி வருகிறார். இது போற்றத்தகுந்த நற்பணி ஆகும்.

நா.பா. நினைவு நாளை கொண்டாடுவதுடன் நா.பா.வின் நினைவை நிரந்தரமாகப் பதிவு செய்யும் வகையில், நா.பா. நண்பர்களின் நினைவுகளைத் தொகுத்துக் கூறும் கட்டுரை நூல் ஒன்றை வெளியிட வேண்டும் என்ற அவா அவருக்குப் பல வருடங்களாக இருந்து வருகிறது. அது தொடர்பாக, 1997ல் அ.நா.பா. திருநெல்வேலியில் என்னைச் சந்தித்து, எனது நினைவுகளை கட்டுரையாக எழுதித் தரும்படி கேட்டார். அப்போது நான் அவரிடம் ஒரு புதிய யோசனையை வெளியிட்டேன்.

நா.பா. பற்றிய கட்டுரைத் தொகுப்பு வெளியிடும் உங்கள் முயற்சியை வரவேற்கிறேன். ஆனால் அதைவிட உருப்படியான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/10&oldid=1111338" இலிருந்து மீள்விக்கப்பட்டது