பக்கம்:தீபம் யுகம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அணிந்துரை


'தீபம்' இலக்கியவாதிகளின் 'வேடந்தாங்கல்!'


தற்காலத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்திரை பதித்துள்ள இரு பெயர்கள்

'தீபம்’

'தீபம்' நா.பா. (நா. பார்த்தசாரதி)

1965 ஏப்ரலில் தோன்றி, 1988 ஏப்ரலில் மறைந்த 'தீபம்' மாத இதழ், தமிழ்ப் படைப்பு உலகில் ஒரு ஒளிமயமான யுகம் தோன்றுவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது.

'தீபம்' ஆசிரியர் நா.பா. அவர்கள் தமது 55ஆம் வயதில் 13.12.1987ல் அமரர் ஆனார்.

'ஈடு செய்ய இயலாத இழப்பு' எனும் சொற்களின் முழுப் பொருளை, எண்ணற்ற தமிழ் அன்பர்களும் படைப்பாளிகளும், வாசகர்களும் அன்று அழுத்தமாக உணர்ந்தனர். இன்றும் உணர்கின்றனர்.

அமரர் நா.பா.வின் வாழ்வு, இலக்கியப் பணிகள், பன்முக ஆளுமை, பங்களிப்பு இவை குறித்து ஒரு தனி நூல் வரவேண்டும் என்பது என் விழைவு. யாரால் (இந்தக் கடுமையான நெருக்கடி மிக்க காலகட்டத்தில்) இது நிறைவேறும்? தெரியவில்லை. எனினும், இது மிக இன்றியமையாத நற்பணியாகும்.

அமரர் நா.பா.வைத் தமிழ் மக்களுக்கு அயராது நினைவூட்ட வேண்டும் எனும் நோக்குடன், 'தீபம்' இலக்கியக் குடும்பத்தைச் சேர்ந்த அ. நா. பாலகிருஷ்ணன், எஸ். திருமலை, திருப்பூர் கிருஷ்ணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/9&oldid=1111336" இலிருந்து மீள்விக்கப்பட்டது