பக்கம்:தீபம் யுகம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 3. 2 தீபம் யுகம் காலம் கடந்து வாழும் இலக்கியங்களை - மக்கள் இலக்கிய மான நாடோடிக் கதைகள், இந்திய மற்றும் பல நாடுகளின் குட்டிச் கதைகள் ஆகியவற்றை - நல்ல முறையில் - தொகுத்துப் பதிவு செய்துள்ளது. தமிழ் இதழியல் வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரிதும் உத வக்கூடிய மணிக்கொடிக் காலம், சரஸ்வதி காலம், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை, தமிழில் சிறு பத்திரிகைகள், எழுத்து அனுபவங்கள் ஆகியவற்றை தொடர்ந்து பிரசுரம் செய்ததன் மூலம் தீபம் தனிச்சிறப்பு பெற்றது. ‘மணிக்கொடிக்காலம்', 'புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச் சியும் ஆகியவை சாகித்திய அகாடமி விருதினைப் பெற்று, தீபத்துக் கும், அக்கட்டுரைகளின் ஆசிரியர்களுக்கும் பெருமை தேடித்தந்துள் { ఫ్ర. இலக்கியத்தின் பல துறைகளிலும் தரமான படைப்புகளையும் புதிய சோதனை முயற்சிகளையும் வெளியிட்டு, தமிழ் பத்திரிகை உலகத்திலும், தமிழ் இலக்கிய உலகத்திலும் தனக்கென ஒரு தனி இடத்தை அடைந்துள்ளது தீபம். அதன் ஒளி மங்காது என்றும் நிலைத்து நிற்கக் கூடியது ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/113&oldid=923202" இலிருந்து மீள்விக்கப்பட்டது