பக்கம்:தீபம் யுகம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 15 1. ஒரு இலட்சியவாதியின் தவம் இலக்கியப் பத்திரிகைகளின் வரலாறு உணர்த்துகிற உண்மைக ளில் ஒன்று - தன்னம்பிக்கையும் இலட்சிய வேகமும் செயல்முனைப்பும், புதி தாக சாதனைகள் புரிய வேண்டும் என்ற வேட்கையும், நம்மால் அவற்றை செய்ய முடியும் எனும் மன உறுதியும், நாம் சாதிப்பதற்கா கப் பல காரியங்கள் காத்துக்கிடக்கின்றன என்ற எண்ணமும் கொண்ட இலக்கியவாதி, போதிய பணபலம் இல்லாது, பத்திரிகை தொடங்கி, பெரும் சிரமங்களுடன் நடத்தி, வைராக்கியத்துடன் அதை வளர்க்க முற்படும் போது, திறமையாளர்கள் பலரது துணை யும் ஒத்துழைப்பும் அவருக்குக் கிடைக்கின்றன. அந்தப் பத்திரிகை வெற்றிகரமாக சாதனைகள் பல புரிந்து, வரலாற்றில் தனி இடம் பெறுவதும் சாத்தியமாகிறது. மணிக்கொடி, சரஸ்வதி, எழுத்து போன்ற இதழ்களின் வரலாறு இதை புலப்படுத்துகின்றது. இவ்வகையில் மற்றுமொரு முக்கிய சான் றாகத் திகழ்கிறது நா.பார்த்தசாரதியின் தீபம்’. 'எந்தப் பத்திரிகையும் இதுவரை சாதிக்காமல், இனிமேல் சாதிப்பதற்கென்றே சில துணிவான இலக்கிய முயற்சிகள் இன்னும் மீதமிருக்கின்றன. ஒரு புதிய பத்திரிகை அத்தகைய இலக்கியக் காரி யங்களைத் தொடங்கி மேற்கொள்ள இடமிருக்கிறது" என நா.பா. உறுதியாக நம்பினார். 'தன்மானமும் நேர்மையுமே இரு கரங்களென நம்பும் ஒர் அசல் எழுத்தாளன்' அவர் பரிசுத்தமான எண்ணங்களுடனும், தனியாத சத்திய வேட்கையுடனும், எல்லா இடங்களிலும் அறிவின் பிரகாச மும் உண்மையின் ஒளியும் துலங்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சி யத்துடனும் அவர் தீபம்' என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஒரு புதிய பத்திரிகை தொடங்குவதிலுள்ள கஷ்டங்களையெல் லாம் நண்பர்கள் நிறைய எடுத்துச் சொன்னார்கள். இது கஷ்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/16&oldid=923208" இலிருந்து மீள்விக்கப்பட்டது