பக்கம்:தீபம் யுகம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 27 பூமியில் முழுதும் தேடியபின் - காலில் புழுதியும் படிந்தே வாடிய பின் காமக் குரோத லோபத்தால் - வீண் சுயமைக் குணத்தொரு தாபத்தால் மாமிசம் விற்பவர் நடுவினிலே - நான் மலர்களைத் தேடித் தவிக்கின்றேன். பித்தர்கள் நிறைந்த உலகினிலே - நான் பேதமை நீங்கித் தவிக்கின்றேன் எத்தர்கள் மலிந்த இந்நாளில் - நான் ஏழ்மையில் நலிந்து கொதிக்கின்றேன் கொள்கையை விடவும் முடியவில்லை - ஊரைக் கொள்ளை இடவும் துணியவில்லை உண்மையைத் தேடி ஒய்ந்து விட்டேன் - உயிர் உள்ளதை நாடி மாய்ந்து விட்டேன் பூமியில் வல்லவர் நடுவினிலே - நான் பொய்யை எதிர்த்துக் கொதிக்கின்றேன். ஆனாலும், நா.பா. ஒரு போதும் நம்பிக்கையை இழந்தது மில்லை. சோர்வு மிகுந்து செயலூக்கத்தை கைவிட்டதுமில்லை. குடும்பப் பொறுப்பும், பத்திரிகைப் பொறுப்பும் அவரை அழுத்தின. அதனால் அவர் மிக அதிகமாகவும் கடுமையாகவும் உழைக்கலா னார். தீபத்தில் அதிகமாக எழுதியதைக் குறைத்துக் கொண்டு, தாராள மாக 'சன்மானம் தரக்கூடிய ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு தொடர்ந்து எழுதுவதில் அக்கறை செலுத்தினார். சிறிதளவு பணம் கொடுக்கக்கூடிய சங்கங்கள், அமைப்புகளுக்கும் சொற்பொழிவு நிகழ்த்தச் சென்றார். கருத்தரங்குகள், மகாநாடுகளில் கலந்து கொள்வ தற்காக வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் போய் வந் தார். 'மாதநாவல் என்று பிரசுரம் பெறுகிற சஞ்சிகைகளுக்கும் எழு திக் கொடுத்தார். கிடைத்த பணத்தை எல்லாம் தீபம் இதழைக் காப்பாற்றுவதற்கே செலவிட்டார். பிறகு 'தீபம் நலனுக்காக, நா.பா. 'தினமணி' பத்திரிகையில் பணி புரியச் சேர்ந்தார். சில வருடங்கள் அந்த நிறுவனத்துக்காக உழைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/28&oldid=923220" இலிருந்து மீள்விக்கப்பட்டது