பக்கம்:தீபம் யுகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தீபம் யுகம் இவ்விதம் 23 வருடங்கள் தீபம்' நா.பார்த்தசாரதியால் வளர்க் கப்பட்டது. இலக்கிய உலகில் தனியானதொரு இடத்தை 'தீபம் பெற முடிந்தது. இதழியல் வரலாற்றில் சிறப்பான இடம் தீபத்துக்கு உண்டு. அவ்விதம் தடம் பதித்துள்ள இலக்கிய இதழ் 'தீபம் சாதனைகளை அதன் வரலாறு எடுத்துக்காட்டுகிறது. கடும் நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைகளினாலும் பலன் இல்லாமல், திடீரென்று 1987 டிசம்பரில் நா.பா. அமரரானார். 'தீபம்' என் நோன்பு - தவம் என்று அறிவித்த நா.பா.வுக்கு ஆரம்பம் முதலே உதவியாக இருந்து, பத்திரிகையின் அலுவலக மற்றும் நிர்வாகப் பணிகள் முழுவதையும் ஒரு அர்ப்பணிப்புடன் கவனித்து வந்தவர் எஸ். திருமலை.நா.பா.வின் உறவினர் அவர். நா.பா.வின் நோன்பு வெளிப்படையாகத் தெரிவது. பத்திரி கையின் துவக்க காலம் முதல் அதன் இறுதிவரை அதற்காகவே வாழ்ந்து உழைத்த திருமலையின் வாழ்க்கையும் ஒரு வேள்வி என்றே சொல்ல வேண்டும். நா. பா. மறைந்ததற்குப் பிறகு, 1988 ஜனவரி-பிப்ரவரியிலும், மார்ச்சிலுமாக தீபம் இரண்டு இதழ்களை திருமலை தயாரித்து வெளியிட்டார். பின்னர் காலத்தின்கட்டாயத்தால் 'தீபம்' இதழ்நின்று விட நேரிட்டது. ஈடு செய்ய முடியாத இழப்பு தான் அது. ஆழ்ந்த இலக்கிய ரசிகர்களும், எழுத்தாளர்கள் பலரும், தர மான வாசகர்களும் இதை உணர்ந்தார்கள். அவ்வப்போது தங்கள் எண்ணத்தை வெளியிடத் தயங்கியதுமில்லை. அத்தகைய சிறப்பை 'தீபம்' அடைந்தது எவ்வாறு? அதற்கு வகை செய்த சாதனைகள் தான் என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/29&oldid=923221" இலிருந்து மீள்விக்கப்பட்டது