பக்கம்:தீபம் யுகம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 31 இதை ஏற்றி வைக்கிறேன் என்பதனால் மட்டும் அல்ல. என்னால் ஏற்றப்படுவது எதுவோ அது சத்தியவேட்கை மிக்கதோர் சுடர் என்ப தால் தான். இந்த ஞான நெருப்பில் நானே தீக்குளித்து எழத் துணிந்தி ருப்பதற்காகத் தமிழ்த்தாய் நிச்சயம் என் பக்கலில் துணை நிற்பாள். தமிழன்பர்களாகிய நீங்களும் துணை நிற்பீர்களென்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு. இது வேறு வழி இல்லாத காரணத்தால் இலட்சக் கணக்கில் பணம் முடக்கும் ஒர் காகித வியாபாரி நடத்த முன்வரும் இச்சை - பச்சை - நிறைந்த கவர்ச்சிப் பத்திரிகை அல்ல. தன்மானமும் நேர்மையுமே இரு கரங்களென நம்பும் ஒர் அசல் எழுத்தாளனின் ஆத்ம சோதனை தான் இந்தப் பத்திரிகை. இதற்கு நீங்கள் அளிக்கும் ஆதரவு ஓர் நியாயமான எழுத்தாளனுக்கு அளிக்கும் ஆதரவாகும். இதைவிட அதிகமாக இதன் சத்தியத்தை வற்புறுத்த வெறும் வார்த் தைகளை நான் சாட்சிக்கழைக்கத் தயாராயில்லை. முன்பு வளர்ந்து கருகிய எல்லா நல்ல பத்திரிகளையும் போல் இதுவும் விரைவில் வாடிக் கருகி நின்று விட வேண்டும் - அல்லது நின்று விடும் என்று நம்புகிறவர்களுக்கு ஒரு வார்த்தை. இது தோற்று விடும் என்று எவ்வளவு பலமாக நீங்கள் நம்புகlர்களோ, அதே போன்ற அல்லது அதை விட அதிகமான பலத்தோடு இது வெற்றி பெற வேண்டுமென்று நான் நம்புவதற்கும் எனக்கு உரிமை உண்டு அல்லவா? பல நல்ல பத்திரிகைகளை ஆதரிக்கத் தவறித்தின்று விழுங்கித் தீர்த்து ஏப்பம் விட்டுவிட்டு நிற்கும் பண்பார்ந்த தமிழகம் இதையும் அப்படிச் செய்யுமானால் அதற்காக நான் ஏன் வருந்த வேண்டும்? நான் ஏன் வெட்கப்படவேண்டும்? தமிழர்களின் பெருந் தன்மைக்கு இதுவும் ஒரு சோதனை யார் ஜெயிக்கிறார்களென்று பொறுத்திருந்து தான் பார்ப்போமே! ஸ்டீபன் ஸ்பெண்டரும், டி.எஸ். எலியட்டும் தங்கள் தனித்துவத்தோடு மேற்கு நாடுகளில் ஒரோர் இதழ்களை நடத்தியிருக்க முடியுமானால் இங்கும் ஏன் அப்படிப் புதியதுவும் தரமானதுவுமான நல்ல முயற்சிகள் வளரலாகாது? இதற் குத் தமிழ்ப் பெருமக்கள் தான் பொருத்தமும் பயனும் அமைகிற வகையில் ஒரு சரியான நல்ல பதிலைச் சொல்லுதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/32&oldid=923225" இலிருந்து மீள்விக்கப்பட்டது