பக்கம்:தீபம் யுகம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33) தீபம் யுகம் நான் இன்று தொடங்கும் இந்தப் பத்திரிகை ஏற்கெனவே என்றுமி ருக்கும் எந்தப் பத்திரிகைக்கும் போட்டியோ எதிரியோ அல்ல. எந்தப் பத்திரிகையும் இதுவரை சாதிக்காமல் இந்தப் பத்திரிகை இனி மேல் சாதிப்பதற்கென்றே சில துணிவான இலக்கிய முயற்சிகள் இன்னும் மீதமிருக்கின்றன. தீபம் இனி அத்தகைய இலக்கியக் காரி யங்களைத் தொடங்கி மேற்கொள்ளுவதற்கு இருக்கிறது. இதனு டைய ஜகஜ்ஜோதியான புதிய பிரகாசத்தினால் எதனுடைய பழைய அழுக்குகளாவது தெரியுமானால் அது அப்படித் தெரிவதில் அழுக்கு இருக்கிறதென்பதைக் குறிக்குமே ஒழிய-இது அந்த அழுக்கைத் தென்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு பிரகாசிக்கிறதென்பது ஆகாது - இதன் குணம் பிரகாசம் என்பது மட்டும் தான் இங்கு நமக்கு தேவையான உண்மை. எனவே அதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் ஒரு புதிய பத்திரிகை தொடங்குவதிலுள்ள கஷ்டங்களையெல்லாம் நண்பர்கள் நிறைய எடுத்துச் சொன்னார் கள். இது கஷ்டம் நிறைந்ததென்பதனாலேயே இதைத்தான் தொடங் வேண்டுமென்ற தீரனின் ஆசை - இயல்பான ஆசை - நியாயமான ஆசை - எனக்கும் எழுந்தது. இதில் சிரமங்கள் நிறைய இருக்கின்றன என்பதனாலேயே இதை நான் துணிந்து மேற்கொள்ள வேண்டியவ னாகிறேன். இந்த வழியில் இலட்சிய வேகமுள்ள பல நல்ல எழுத்தா ளர்கள் ஏற்கெனவே தொடர்ந்து சென்று ஒருவர் பின் ஒருவராகத் தோற்றிருக்கிறார்கள் என்பதனாலேயே அவர்கள் சார்பில் அவர்களு டைய தோல்விகளுக்கெல்லாம் வட்டியாக இதில் நான் வெற்றி பெற வேண்டுமென்ற தன்னம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது. இந்தத் தன் னம்பிக்கை தான் என்னிடம் நான் வெற்றி பெறுவதற்காக வைத்திருக் கும் வைரம் பாய்ந்த ஆயுதம். இது மேடு பள்ளம் நிறைந்த பாதை என்பதாலேயே இதில் நான் துணிந்து நடப்பதற்காக எப்போதும் போல் வலது காலை முன்னெடுத்து வைத்திருக்கிறேன். என்னுடைய இந்த வழியில் இடையூறுகள் நிறைய இருக்கும் என்பதே எனக்கு மலையத்தனை தைரியத்தை அளிக்கிறது. நான் இன்று ஏற்றி வைக் கிற இந்தத் தீபம் தமிழிலக்கிய உலகில் சகல இருளையும் நீக்கிப் புத்தொளிபரப்ப வேண்டுமென்று எனக்குக் கொள்ளை ஆசை. நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/31&oldid=923224" இலிருந்து மீள்விக்கப்பட்டது