பக்கம்:தீபம் யுகம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 33 தீபம் தமிழ் எழுத்தாளர்களின் சுதந்திரமான சிந்தனைக்கும் நினைவுகளுக்கும் வசதியான ஒரு மேடையாக அமையும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. எழுத்துலகச் சிற்பிகள் சேர்ந்து படைக்கும் இந்த இலக்கிய ஏட்டைப் பலப்படுத்துவதற்குத் தமிழிலக்கியவுணர் வுள்ள ஒவ்வொருவரும் நேரே சந்தாதாராகி ஆதரிக்க வேண்டும். இதை விட இன்னும் நான் இங்கு என்ன சொல்வது? எப்படிச் சொல்வது? உங்கள் உணர்வுகளுக்கும் என் உணர்வுகளுக்கும் நடு வில் வெறும் வார்த்தைகள் வந்து நின்று தானா பேச வேண்டும்? மீண்டும் பார்க்கலாம். அடுத்த இதழில் சந்திப்போம். வணக்கம். - அன்பன் நா. பார்த்தசாரதி. பிற்காலத்தில் அண்ணாசாலை என்று பெயர் மாற்றம் பெற்று விட்ட சென்னை மவுண்ட்ரோடின் அருகே உள்ள எல்லிஸ் ரோடின் கிளைகளில் ஒன்றான நல்லதம்பி செட்டி தெருவில், 6-ம் எண் கட்டி டத்தின் மாடிப்பகுதியில் 'தீபம் பிறந்தது. தீபம் காரியாலயம் இறுதி வரை அந்த இடத்திலேயே செயல்பட்டது. 'தீபம்' பத்திரிகை அகல வடிவத்தில் - கிரவுன் 1x4 அளவில் - 80 பக்கங்கள் கொண்டிருந்த்து. அதன் விலை 75 காசுகள். இந்த விலை வெகுகாலம் மாறுதல் பெறாமலே நீடித்தது. தீபம் அட்டை வழுவழுப்பான ஆர்ட்தாளில், பளிச்சிடும் பல வர்ணங்களில், இதர பத்திரிகைகளின் அட்டைப்படங்களிலிருந்து மாறுபட்ட தன்மையில் தீட்டப்பெற்ற சித்திரம் ஒவவொரு இதழுக் கும் வசீகரம் சேர்த்து வந்தது. முதல் இதழின் அட்டைப்படம் பற்றிய விளக்கம் இது - திருமகளும் நாமகளும் சேர்ந்து திருமகள் போல் கண் பார்வையும், மனப்பார்வையும் ஒருங்கு பொருந்திய இந்தத் தமிழ்ப் பெண் நாமகளுக்கு முன் தன் நெஞ்சின் பரிசுத்தத்தை ஒரு சுடராக்கி ஏந்துவது போன்ற பாவனையில் தீபத்தை எடுத்து ஏந்தி நாமகளை வணங்குகிறாள். பாரதியாரால் இலட்சுமிகரம் வாசம் செய்யும் இடங்களைப் பற்றி எண்ணப்படும் போது கன்னிப்பெண்ணின் கண் பார்வையும் ஒன்றாக எண்ணப்படு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/34&oldid=923227" இலிருந்து மீள்விக்கப்பட்டது