பக்கம்:தீபம் யுகம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 39 எதிலும் காண்கிறோம். காந்தியடிகள் எவ்வளவு பெரியவர் என் பதை நாம் அன்று உணர்ந்ததை விட இன்று தான் மிக நன்கு உணர முடிகிறது. உணர்கிறோம். பெருமூச்சு விடுகிறோம். தேசம் முழுவ தும் தேடினாலும் மிக உன்னதமான ஒளி எதுவும் இன்று எந்த மூலையிலிருந்தும் நமக்குத் தெரியவில்லை. காந்தியடிகள் பாதம் மிதித்த மண் என்ற ஒரே தகுதி தான் இன்றைய இந்தியாவுக்கு மீதம் இருக்கிறது. . அடிகளைப் போல் பதவிகளில் நாட்டமின்றிப் பாமர இந்தியர்க ளின் வாழ்வு ஒளி பெற ஒற்றைத் துணி உடுத்து எளிய கோலத்தோடு தொண்டு செய்ய முன்வரும் சமுதாய மகாமுனிவர் எவரும் இன்று நம் முன் இல்லை. ஏழைகளைத் துன்புறுத்தி இலஞ்சம் வாங்கி, மாடமாளிகை கட்டி வாழும் சுக போகியான ஒவ்வொருவனையும் பார்க்கும் போது காந்தி இன்றிருந்தால் கண்ணீர் சிந்துவார் என்பதை உணர முடிகிறது. ஒவ்வோர் அடிகள் பிறந்த நாள் வரும் போதும் இந்தக் கண்ணீரையே நாமும் சிந்துகிறோம். நம்முடைய கண்ணிர் வீண் போகாது. (அக்டோபர் 1970) காந்தியத் தத்துவத்தின் அடிப்படை இந்தியப் பண்பாட்டின் வழிவழி வந்த தன்மைகளைப் பலமாக் கொண்டிருப்பது. மிருக பலத்தினால் எந்த மதத்தையும் காப்பாற்றிவிட முடியாது என்று காந்தீயம் நம்பியது. காந்தீயம் என்பது வேறெந்த அரசியல் தத்துவங்களையும் போல் இரவல் வாங்கப்பட்ட வெளிநாட்டுத்துண் டுதலை உடையதல்ல. இந்த மண்ணிலேயே பிறந்து, இந்த மண்ணின் அசல் தேசீயத் தன்மைகளை உடைய ஒரே தத்துவம் காந்தீயம் தான் என்று தெரிகி றது. காந்தியடிகளுக்கு முன்பும் இந்த நாட்டிலே சமுதாய, சமய, ஆன்மீக சித்தாந்தங்கள் உண்டு. ஆனால் இந்த நாட்டின் முதல் அரசியல் சித்தாந்தம் காந்தி அடிகளால்தான் பிறந்தது. இந்த நாட்டின் கருணைமயமான முதல் அரசில் மதம் காந்தீயம் என்ற பெயரில்தான் உண்டாயிற்று." (காந்தீயம் என்னும் பாரம்பரியம் - அக்டோபர் 1972)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/50&oldid=923245" இலிருந்து மீள்விக்கப்பட்டது