பக்கம்:தீபம் யுகம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தீபம் யுகம் திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்பட்ட போது, நா. பா எழுதிய தலையங்கம் மிக முக்கியமானது ஆகும். 'திருவள்ளுவரின் இரண்டாயிரம் ஆண்டுநிறைவு விழாவைத் தமிழகம் எங்கும் கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். ஆண்டுகள் எவ்வளவு ஆகியிருந்தாலும் திருவள்ளுவர் தமிழர் சமு தாயத்தின் அறிவு நிதியாகத் திகழ்பவர். திருக்குறள் தமிழில் உள்ள அற நூல்களில் தலை சிறந்தது. விழா எடுத்து, ஊர்வலம் நடத்தி, சொற்பொழிவுகள் செய்து கொண்டாடுவது ஒருபுறமிருக்க, வள்ளு வர் கூறிய அன்பு, அறம், இரக்கம், ஒழுக்கம், பண்பு, பயனில சொல்லாமை ஆகிய எக்காலத்துக்கும் நல்லவற்றைக் கடைப்பிடிக்க முயல்வதே குறளாசிரியருக்குச் செய்யும் நன்றியாகும். செய்ந்நன் றியை அறமாகக் கூறிய வள்ளுவருக்கு நாம் செய்ய வேண்டிய நன்றி அவர் கூறிய அறவாழ்வையும் ஒழுக்க நெறியையும் போற்றி மேற் கொள்வதேயாகும். பல ஆண்டுகளுக்கு முன் காந்தியடிகள் இந்நாட்டில் திருவள்ளு வருக்கு அப்படி வாழ்ந்து காட்டுவதன் மூலம் நன்றி செலுத்தினார். பெரியோர்களை அவர்கள் கூறிய கருத்தின்படி வாழாமல் - வெறும் சொற்களால் துதிப்பது மட்டும் - முறையான போற்றுதலாகாது. திருவள்ளுவர் விழா வருவதை ஒட்டி இதே ஆண்டில் காந்திய டிகள் நூற்றாண்டு விழாவும் வருகிறது. வாழ்வுநூல் செய்த உலகப் பொதுமறையாசிரியரின் பெருவிழாவும் வாழ்ந்து காட்டிய நம் தேசத் தந்தையின் நூற்றாண்டு விழாவும் ஒரே ஆண்டில் வருவது மிகமிகப் பொருத்தமாயிருக்கிறது. திருவள்ளுவர் கடைப்பிடிக்க வேண்டிய நூலின் ஆசிரியர். காந்தியடிகள் அப்படிக் கடைப்பிடித்து வாழ்ந்த மாமேதை. இந்த இரண்டு மாமேதைகளின் விழாவும் வருகிற இவ் வாண்டிலிருந்து, நாம் பயனில செய்வதையும் சொல்வதையும் விடுத்து நல்வாழ்வு வாழப் பரிதிக்ஞை எடுக்க வேண்டும். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் நன்றியாகும் என்பதை மீண்டும் மீண் டும் வற்புறுத்திக் கூற விரும்புகிறோம்." (பிப்ரவரி 1969) தமிழ் மொழிக்குப் புதுமைகள் சேர்ப்பது பற்றியும், எழுத்தாளர் கள் கடமை குறித்தும், படைப்பிலக்கியம் எவ்வாறு அமைய வேண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/51&oldid=923246" இலிருந்து மீள்விக்கப்பட்டது