உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தீபம் யுகம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 51 டும் என்றும் நா. பா சிந்தனை வளர்ந்திருக்கிறார். பல தலையங்கங்க ளில், அவை அவருடைய இலக்கிய அக்கறையையும் ஆழ்ந்த சிந்த னையையும் வெளிப்படுத்துகின்றன. அவருடைய சமூக நல உணர் வையும், நாட்டின் நலம் விரும்பும் பண்பையும் எடுத்துக்காட்டுகின் றன. காலத்தை பிரதிபலிக்கும் கதைகள் என்ற தலையங்கத்தை விசேஷமாகக் குறிப்பிடவேண்டும். w "இந்திய மொழிகளில் சமஸ்கிருத்தைப்போலவே பழமையான மொழி தமிழ். நீண்ட பாரம்பரியமும் இலக்கணச் செம்மையும், இலக் கியச் செழுமையும் உடைய தமிழ் மொழியில் இவ்வளவு பழம் பெருமைகள் இருந்தும் புதுப் பெருமைகள் எவையும் விரைந்து வளராமல் இருக்கக் காரணம் என்ன என்பது அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. புதுமை இலக்கியத் துறையில் தமிழில் ஏன் விரைவான வளர்ச்சியும் புதுப்புது முயற்சியும் ஏற்படவோ அங்கீகரிக்கப்ப டவோ இல்லை? மிகப் பெரிய பழமையே இதற்குக் காரணமா? அல்லது மொழி வல்லுநர்களிடம் விட்டுக் கொடுக்கும் மனப்பான் மையின்மை காரணமா? தற்கால நடைமுறையை அனுசரித்த எழுத்துக்கள் தமிழில் மிக வும் குறைவாகவே எழுதப்படுகின்றன. சமூக, அரசியல், பொருளா தார பாதிப்புகளால் தனிமனிதனும், மத்தியதர வர்க்கமும், மத்தியதர வர்க்கத்துக்கும் கீழேயுள்ள ஏழைகளும் எப்படி எப்படி எல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்த கற்பனைகளும் கதைகளும் அதிகம் வர வேண்டும். - ." அரசியலால் பாதிக்கப்படாத முனைகளே இன்று இல்லை என்றா லும், தமிழ் எழுத்தாளர்களில் பலர் அதனோடு நேரடியாகவோ மறை முகமாகவோ, தொடர்புபடும்கதைகளையும் நாவல்களையும், எழு தத் தயங்குகிறார்கள். அப்படி எழுதுகிறவர்களையும், எழுத முயல்கி றவர்களையும் பயத்தோடும் பரிதாபத்தோடும் நோக்குகிறார்கள். இது ஏன் என்று தெரியவில்லை. கலையைப் படைப்பதற்கும் இரசிப் பதற்கும் நிர்ப்பயமான மனநிலை வேண்டும் அடிமை நாட்டில் கலைவளர்ச்சி இல்லாமல் போவதற்கு இதுவே காரணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/52&oldid=923247" இலிருந்து மீள்விக்கப்பட்டது