பக்கம்:தீபம் யுகம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 தீபம் யுகம் 5. படைப்பிலக்கியப் பங்களிப்பு இலக்கியப் பத்திரிகைகள் படைப்பிலக்கிய முயற்சிகளில் ஆர் வம் காட்டுவது இயல்பு. படைப்பிலக்கியம் என்று சிறுகதை, கவிதை, நாவல் ஆகியவற் றில் தான் இலக்கியப் பத்திரிகைகள் பொதுவாக அக்கறை செலுத்து கின்றன. இலக்கியத்தின் இந்தத் துறைகளின் வளர்ச்சிக்கும் வளத்துக் கும், இலக்கியப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்கிற பலவும் சரியான முறையில் பங்களிப்பு செய்திருக்கின்றன என்று கூற இய லாது. இலக்கியப் பத்திரிகை என்றால் சிறுகதைகள், கவிதைகள், பக்கங்கள் அதிகம் இருப்பின் தொடர்கதை ஆகிய அம்சங்கள் தேவை என்ற அளவிலேயே பெரும்பாலான பத்திரிகைகள் இவற் றையும் பிரசுரிக்கின்றன. ஆற்றல் நிறைந்த தேர்ந்த படைப்பாளிக ளின் கலைத்தரமான எழுத்துக்களை, ஆழ்ந்த - கனமான புதுமை யான படைப்புமுயற்சிகளை வரவேற்று வெளியிடுகிற இதழ்கள் ஒரு சிலவே தோன்றியுள்ளன. அவை தேர்ச்சி பெற்ற மூத்த எழுத்தாளர்க ளின் எழுத்துக்களையும், ஆற்றலும் ஆர்வமும் மிகுந்த இளைய படைப்பாளிகளின் சிருஷ்டிகளையும், புதிதாக எழுதுகிற இளைஞர் களின் நயமும் தரமும் நிறைந்த எழுத்துக்களையும் விரும்பி ஏற்றுப் பிரசுரம் செய்கின்றன. இவை இயல்பாகவே இலக்கியம் வளரத் துணை புரிகின்றன. அதன் மூலம் இலக்கியத்தின் வளம் பெருக உதவுகின்றன. - - 'தீபம்' அத்தகைய பத்திரிகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகத் திகழ்ந்தது. சிறுகதை, கவிதை, நாவல், ஆகியவற்றுக்கு மட்டுமல் லாது குறுநாவல், கட்டுரை எனும் இலக்கியப் பிரிவுகளுக்கும் கணிச மான பங்களிப்பு செய்துள்ளது தீபம். பழம்பெரும் எழுத்தாளர்கள், அதன் காலத்தில் புகழ் பெற்று விளங்கிய படைப்பாளிகள், புதிய இளைய படைப்பாளர்கள் எழுதத் தொடங்கி - நன்கு வளரக் கூடும் எனும் எதிர்ப்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் இடம் அளித்த - இளம் எழுத்தாளர்களின் சிறுகதை, கவிதை, தொடர்கதை, கட்டுரைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/57&oldid=923252" இலிருந்து மீள்விக்கப்பட்டது