பக்கம்:தீபம் யுகம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§4. - தீபம் யுகம் 6. கட்டுரை இலக்கியம் கட்டுரை இலக்கியத்துக்கு தீபம் ஆற்றியுள்ள பணி போற்றப் பட வேண்டியது ஆகும். 'தீபம் போன்ற இலக்கிய இதழில் மற்ற இதழ்களை விட ஒரு கனம் தேவை என்று உணர்ந்து நா. பா. ஆரம்பம் முதலே கட்டுரை இலக்கியத்திலும் விசேஷ கவனம் செலுத்தி வந்தார். விசால நோக்கில், பல்வேறுபொருள்கள் குறித்தும், சிந்தனை செறிந்த கட்டுரைகளை 'தீபம் வெளியிட்டு வந்தது. இலக்கியம், நாடகம், திரைப்படக்கலை, சமூகம், பொருளாதா ரம், நாட்டு நலம், முதலியன பற்றிய கட்டுரைகளை அனுபவமும் ஆற்றலும் பெற்றவர்கள் எழுதியுள்ளனர். இலக்கியத்தில் பழம் தமிழ் இலக்கியம், புதுமை இலக்கியம், பிற மொழிகளின் இலக்கியம், அயல் நாடுகளின் இலக்கியம் என்று பரந்த நோக்கில், ஆழ்ந்து கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. நல்ல கட்டுரைகள் எழுதுவதில் தேர்ந்தவர் எனப் புகழ் பெற்றி ருந்த தி.ஜ.ர. (தி.ஜ.ரங்கநாதன்) அடிக்கடி கட்டுரை வழங்கினார். பத்திரிகை அனுபவம் மிகுந்த அவர் பெரும்பாலும் பத்திரகைத்துறை சம்பந்தப்பட்ட கட்டுரைகளையே எழுதினார். பத்திரிகைத் தொழில் ஒரு கண்ணோட்டம், நாலாவது துண், விலையும் பொருளும் (பத்தி ரிகையின் விலையைப் பற்றியது), லட்சியப் பத்திரிகைகள், பத்திரி கைகளில் அவதூறு என்பன அவர் எழுதியுள்ள கட்டுரைகள் ஆகும். தமிழில் விஞ்ஞானம் பற்றியும், வீரர் பண்பாடு குறித்தும் அவர் எழுதியிருக்கிறார். அதே போல புத்தக வெளியீட்டுத்துறையில் மிகுந்த அனுபவம் பெற்ற கண. முத்தையா பயனுள்ள சிந்தனைகளை கட்டுரைகளாக வரைந்தார். புத்தகத் தொழிலும் அதன் எதிர்காலமும், புத்தகத் தொழி லும் காகிதப் பஞ்சமும், இந்தியாவில் புத்தக வெளியீடு ஆகியவை அவர் எழுதிய கட்டுரைகள் ஆகும். இவை தவிர, இந்திய சுதந்திரப் போரில் நேதாஜியின் பங்கு விடுதலையும் முன்னேற்றமும், இலக் கிய வளர்ச்சி என்ற தலைப்புகளிலும் அவர் தனது எண்ணங்களை பதிவு செய்திருக்கிறார். - நாவல் குறித்து ப. கோதண்டராமன் பல கட்டுரைகள் எழுதியுள் ளார். நாவல் ஒரு கலை, நவீனங்கள் பலவகை, நாவலின் கதையும் கதைக்கருவும் என்று பல தன்மைகளில் அவர் சிந்தனைகளை வெளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/65&oldid=923261" இலிருந்து மீள்விக்கப்பட்டது