பக்கம்:தீபம் யுகம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 35 யிட்டிருக்கிறார். தமிழ்நாவல் - சில அடிப்படைக் கருத்துக்கள், ஆர் கே. நாராயணன் நாவல்கள். தமிழ் நாவலின் தோற்றம், நாவல் நூற்றாண்டு விழா, தமிழ் நாவலும் பெண்கள் பங்கும், தெலுங்கு நாவல் இலக்கியம் என்று பல பார்வைகள், வெவ்வேறு எழுத்தாளர்க ளால் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டுள்ளன. 'கணையாழி ஆசிரியர் கி. கஸ்தூரிரங்கன் விமர்சனப் பாங்கில், பலவிதப் பிரச்சினைகள் குறித்தும் தீபத்தில் கட்டுரைகள் எழுதியிருக் கிறார். தமிழ் நாட்டில் குடும்பப் பத்திரிகைகள், தமிழ் மொழியின் காவலர்கள், தமிழ் நாட்டின் நாளிதழ்கள், புதிய அலைக்கலைஞர் கள், தமிழர்கள் இரு வகை, தமிழ் இலக்கியத்தில் புதுமை, முற்போக் கும் பிற்போக்கும், மக்கள் ரசனைக்காக, தமிழ் எழுத்தாளர்கள், நாணயம் என்ன விலை ஆகிய தலைப்புகளில் அவர் எழுதியுள்ள கட்டுரைகள், சூடும் சுவையும் நிறைந்து, படிப்போரை சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. இலக்கியத்தில் இந்தியத்தன்மை குறித்தும், பொதுவாக இலக்கி யம் பற்றியும் க. நா. சுப்ரமண்யம் எழுதிய கட்டுரைகளையும், தி.ஜா னகிராமன் இலக்கிய ரசனை பற்றி எழுதிய கட்டுரைகளையும், இந் திரா பார்த்தசாரதி, கே. எஸ். பூரீநிவாசன் கட்டுரைகளையும் தீபம் பிரசுரித்திருக்கிறது. கி. சந்திரசேகரன் இரு மகாகவிகள், டி.கே.சி. - சில நினைவு கள், நான் அறிந்த ராஜாஜி, மாக்ஸ்முல்லர் என்கிற வேதாந்தி மாமுனி வர் ஆனந்த குமாரசுவாமி பற்றிய ஆழ்ந்த சிந்தனைகளை கட்டுரை யாக்கியுள்ளார். இந்தியப் பண்பாடு குறித்தும் அவர் எழுதினார். நா. பார்த்தசாரதியின் தனிக்கட்டுரைகள் - தமிழில் இலக்கிய ஏடுகள், பழந்தமிழ் இலக்கியமும் தற்காலத்தமிழ் எழுத்தாளர்களும், இலக்கியத்தில் உளவியல் முறை, பழமொழிகள் காட்டும் சமுதாயம், சர்வதேச திரைப்படவிழா பற்றியவை - இடம் பெற்றுள்ளன. தொ. மு. சி. ரகுநாதன், பாரதியின் மாயையைப் பழித்தல் ஒரு விசாரணை, பாரதியும் தேசிய ஒருமைப்பாடும், சோவியத் நாட்டில் எழுத்தாளர் சுதந்திரம், சென்னை வந்த சோவியத் எழுத்தாளரோடு சிலமணிநேரம் ஆகிய கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பாரதி குறித்து பல கோணங்களில் பலர் எழுதிய கட்டுரைகள் அவ்வப்போது தீபத்தில் வெளிவந்தன. அகிலன், நீல. பத்மநாபன், ராஜம் கிருஷ்ணன் சில தனிக்கட்டு ரைகள் எழுதியுள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/66&oldid=923262" இலிருந்து மீள்விக்கப்பட்டது