பக்கம்:தீபம் யுகம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 了靠 8. சூடும் சுவையும் இலக்கியப் பத்திரிகை கனமான - nரியஸ் - விஷயங்களை மட்டுமே கொண்டிருக்கவேண்டும் என்பதில்லை. சுவாரசியமான கிண்டல், குத்தும் நையாண்டி, பரிகாசம், அங்கதம் போன்ற சுவைக ளைக் கொண்டலைட்டர் வெயின் சமாச்சாரங்களும் இருக்கவேண் டியது தான். தீபம் இந்த வகையிலும் பல அம்சங்களை அளித்து வந்தது - வம்பு மேடை, ரசமட்டம், இரத்தினச் சுருக்கம் முதலிய தலைப்புகளில், இவை பத்திரிகை உலகத்தில் நிலவிய போலித்தனங்களையும் எத்து வேலைகளையும் வேஷயங்களையும் நகைச்சுவை உணர் வோடு வெளிச்சமிட்டு காட்டின. 'வம்பு மேடை யிலிருந்து சில உதாரணங்கள் - 善 காவிய கெளரவம் வ.உ.சி. சிவா, நெளரோஜி, டாக்டர். உ.வே.சா. ரவிவர்மா, சுப்புராம தீட்சிதர் போன்றவர்கள் ஒருநாளும் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருக்க நேர்ந்ததில்லை. ஆனால் அதை விட பெரிய பாக்கியம் ஒன்று இவர்களுக்கு எல்லாம் கிடைத்திருக்கிறது. அதாவது, இவர்களை எல்லாம் மகாகவி பாரதியார் தம் அமுத வாக்கினால் ஒவ்வோரிடத்தில் புகழ்ந்து பாடியிருக்கிறார். பாரதியின் கவிதைத்தலைமுறையில் அவர் வாக்கில் விழுந்த ஒவ்வொருவரும் மகாபாக்கியசாலிகள் தான். 普 ஹாஸ்யப் பஞ்சம் ஒரு பயந்த கேள்வி மேல் நாட்டிலிருந்து வரும் அத்தனை நவீன மோஸ்தா பத்திரி கைகளையும் நிறுத்தி வராமற் செய்து விட்டாலோ, கிடைக்காமற் செய்து விட்டாலோ இங்கு நிலைமை என்ன ஆகும்? ஒரு துணிந்த பதில் தமிழ்ப் பத்திரிகைகளில் நிச்சயமாக ஹாஸ் யம் செத்துப் போகும். துணுக்குகளும் ஸ்பேஸ் ஃபில்லர் களும் (இடம் நிரப்பிக்கட்டம் கட்டிப் போடுகிற துணுக்குகள்) வரமாட்டா. 尊 'ருசி விரும்பிய வாய் பத்தியம் காக்கமுடியாது என்று ஒரு பழமொழி உண்டு. இலக்கியத்துக்குத் தொண்டு செய்வதாகக் கூறும் சில தமிழ்ப் பத்திரிகைகள் சினிமாப் பகுதியையும் கட்டிக் காத்து வாசகர்களை உய்விக்கும் ருசியைப் பழக்கிவிட்டன. ஆகவே தரம் என்கிற பத்தியத்தை அவற்றால் காக்க முடியாமற் போனதில் வியப் பில்லை. . - 誓 ↔ ↔ * ரசமட்டம் பகுதியிலிருந்து -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/72&oldid=923269" இலிருந்து மீள்விக்கப்பட்டது