உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தீபம் யுகம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 89 எழுதினார். கே. சுவாமியின் வளரவில்லை' என்ற கட்டுரை மறுப்பு கூறிற்று. வளர்ந்திருக்கிறது என்று கோவி. பரஞ்சோதி கருத்து தெரிவித் தார். சித்திர பாரதி வளரவில்லை என்று வாதாடினார். வளரத் தொடங்கியிருக்கிறது என்று இரவீந்திரநாத் ஆறுமுகம் அபிப்பிராயப்பட்டார். பெருக்கம் உண்டு; ஆனால் வளம் இல்லை என்று சு. சங்கர சுப்ரமண்யன் அறிவித்தார். வளர்ந்திருக்கிறது என்ற ந்ோக்கில் யா. ராயப்பன், சிவமுருகள் - வளரவில்லை என்று சுப. கோ. நாராயணசாமி, சு. அரங்கராசன் எண்ணங்களும் வெளிவந்துள்ளன. அடுத்ததாக, தமிழில் விமர்சனம் பற்றிய பட்டி மன்றம் இடம் பெற்றது. . வளர்ந்திருக்கிறது என்ற கருத்தை சு. சங்கர சுப்ரமண்யன் முன் வைத்தார். விஜயசுந்தரம் அதை மறுத்து விமர்சனம் வளரவில்லை என்று கூறினார். கலகக் கண்ணன், யா. ராயப்பன், எஸ். டி. போஸ், சு. அரங்கரா சன் ஆகியோர் வளர்ந்திருக்கிறது என்றும், வி. பாலு, தமிழவன், அம்பைபாலன், பூநீலித்யா, மு. வேலாயுதம் ஆகியோர் வளர வில்லை என்றும் அபிப்பிராயம் தெரிவித்தார்கள். அத்துடன் சரி. அதன்பிறகு பட்டிமன்றம் தலைகாட்டவில்லை. தீபம் இலக்கிய விவாதங்களுக்கு இடமளிப்பதில் ஆர்வம் காட்டி வந்திருக்கிறது என்பதைக் குறிப்பிட வேண்டும். எதிர்காலத் தமிழ்க்கவிதை எப்படி இருக்க வேண்டும் என் றொரு கட்டுரையை மீ.இராசேந்திரன் (கவிஞர் மீரா) ஒரு சமயம் தீபத்தில் எழுதினார். அதன் மீது ஞானக்கூத்தன் தனது அபிப்பிராயங்களை வெளி யிட்டுள்ளார். நா. ஜெயராம் கட்டுரையும் பிரசுரமாயிற்று. தொடர்ந்து த. கோவேந்தன், விசுவநாதன் அவரவர் எண்ணங்களை எழுதினார் கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/90&oldid=923289" இலிருந்து மீள்விக்கப்பட்டது