பக்கம்:தீபம் யுகம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தீபம் யுகம் 14. பிறமொழி இலக்கிய அறிமுகம் இந்திய மொழிகளின் இலக்கியங்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் நா.பா. மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். பிறமொழிச் சிறுகதைகள், குறுநாவல்களின் தமிழாக்கத்தை தீபம் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுவந்ததையும், இந்திய இலக்கியப் படைப் பாளிகளின் சந்திப்புகளை பிரசுரித்ததையும் முன்னரே குறிப்பிட்டி ருக்கிறேன். சுதந்திரத்துக்குப் பின் இந்திய இலக்கியங்களின் நிலை குறித்த விரிவான கட்டுரைகளையும் தீபம் வெளியிட்டது. வங்கம், மலையா ளம், தெலுங்கு பஞ்சாபி, உருது, உடியா ஆகிய மொழிகளின் இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகள் பிரசுரம் பெற்றுள்ளன. பிறமொழி நாவல்கள் சிலவற்றைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகள் அவ்வப் போது தீபத்தில் வந்துள்ளன. கே. ஏ. அப்பாஸின் அஜந்தா நாவல் பற்றிய கட்டுரை வெளியி டப்பட்டது. விபூதிபூஷன் வந்த்யோபாத்யாயரின் ஆரண்யக (வன வாசம்) நாவல் பற்றி வெ. குருராஜ் கட்டுரை எழுதியுள்ளார். . குஜராத்தி ஆசிரியர் காகா காலேல்கர், வங்காள நாவலாசிரியர் பங்கிம் சந்திரர் படைப்புகள் குறித்து கட்டுரைகள் வந்துள்ளன. ராஜாராவின் கதைகள் பற்றி கி. அ. சச்சிதானந்தன் எழுதினார். உபேந்திரநாத் எழுதிய அமலா' நாவல் பற்றி ஒரு கட்டுரை வந்தது. தகழியின் கயிறு நாவலை குறிஞ்சிவேலனும், தாகூரின் வீடும் வெளியும் நாவலை பி. வி. சுப்பிரமணியனும் அறிமுகப்படுத்தியி ருக்கிறார்கள். - இந்திய மொழி இலக்கியங்களில் காட்டிய ஆர்வத்தையும் ஈடு பாட்டையும் சர்வதேச இலக்கியங்கள் மீது தீபம் கொண்டிருக்க வில்லை என்றே சொல்ல வேண்டும். எனினும், ஆரம்ப வருடங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/97&oldid=923296" இலிருந்து மீள்விக்கப்பட்டது