பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஃபோனிக்ஸ் பறவையாய்த் திரிய வேண்டிய வயதில்

உன் காலோன்று வெட்டப் பட்டுக் கண்ணிர் ஓடையானாய்!

ஆனால்,

எங்கள் நாட்டுத் திருக்குறள் போல் ஒன்றரை அடியிலேயே உலகப்புகழை ஓடி வளைத்துக் கொண்டாய்!

உனக்கு வந்த புற்று நோய் .. நோயா அது! சதையுடம்பின் சகாரா! மேனி மண்ணின்

மேல்விழுந்த ஹிரோஷிமா!

தசைக் கறையான்! உயிரைச் சுரண்டியுண்ணும் குருத்து வண்டு!

வளரும் வயிற்று வாதாபி அரக்கன்!

உள்ளே கருவுற்று உள்ளே வளர்ந்து பின்னர் வளர்த்த முட்டையை உடைக்கும்

சாவுக் குஞ்சு!

லிங்கன் காந்தி

52