பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்திக் கிடக்குமிச் சிதறலில் முழுமையாய் இந்தியன் எவனையும் காணோம்; இங்கே இந்து முஸ்லீம் கிறித்தவன் பெளத்தன் சந்தியா வந்தனச் சைவன் வைணவன் பார்ப்பான் பறையன் நாடான் நாய்க்கன் என்ற கூச்சலே எதிரொலிக் கின்றது.

மதச்சார் பற்ற அரசாங் கங்கள் மதத்தை மறைவாய்த் தாலாட்டு கின்றன. மதப்புதர் மண்டி மனிதப் பண்பெனும் மலர்க்காடு இன்று மண்ணில் புதைந்தது. நிற்பவன் தனது நிழலையே எதிரிய்ாய்க் கற்பனை செய்யும் காலம் வந்தது. உள்ளொளி பெருக்கிய மதங்கள், இன்று கள்ள வாணிபப் பொருளாகி விட்டன.

பூனூல் சுருக்குக் கயிறாய், வளைந்த கூனல் பிறையே குற்று வாளாய்ச் சிலுவையே ஈட்டியாய் மாறி விட்டன.

பாதி உலகில் தனதுகால் நீட்டிப் படுத்துக் கிடக்கும் பரந்த ருசியாவில் யூதம் கிறித்தவம் இசுலாம் என்ற மதங்கள் பற்பல இருப்பினும், அங்கே மனிதன் ஒருவனே; அவன்தான் ருசியன்! விரல் நுனிக்கு மேலங்கு நகத்தையும் வீட்டு வாயிலுக்கு மேலங்கு மதத்தையும் வளi க்கும் வழக்கம் ருசியருக் கில்லை.

அதைப்போல் இந்திய மண்னும் ஒருநாள் மதப்போர் இல்லாத சோலையாய் மாறுமா? பண்புக் கொடிகள் படர்ந்துகொத் தாக அன்பு மலர்கள் அங்கே மலருமா? சமத்துவத் தென்றல் வீசுமா? உனைப்போல் உணர்ச்சிச் சிறகடித்து உயரப் பறந்து மலர்தொறும் மலர்தொறும் மகிழ்ந்துவிற் றிருக்கும் நிலையிங்கு நிச்சயம் தோன்றுமா? வண்ணத்துப் பூச்சியே! வாய் திறந்து கூறு!

    • r 4