பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீதை

மனிதாபிமானம் உள்ளவன் அரசியல் வாதியாக இருக்க முடியாது. சந்தர்ப்ப வாதமே அரசியலின் ஆணிவேர்.

இராமன்

மூட்டிய தீயில் உன்னைக் குளிப்பாட்டியதும் காட்டுக் கனுப்பியதும் சந்தர்ப்பவாதம் என்றா கருதுகிறாய்?

சீதை

பாம்பும் மீனும் பசியெடுத்தால் தன் குஞ்சுகளையே தின்றுவிடும். அரசியல் வாதிகளுக்குப் பதவிப் பசியெடுத்தால் மனைவி மக்களையும் அவர்கள்

இழக்கத்

தய்ங்க மாட்டார்கள்

நீர் விரும்புவது

பதவி! விளம்பரம்!

94