பக்கம்:துங்கபத்திரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

என்னைக் கருப்பட்டிக் கவிஞன் என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள். ‘என்ன வேண்டும் ஐயா' என்று வினவினேன். 'உமக்கு அல்லாவின் பால் பக்தி இருந்தால், அவன் புகழ் உலகம் முழுவதும் பரவ உனக்குப் பிரியம் இருந்தால், இன்று இரவு நீ எனக்கு ஒரு உபகாரம் செய்ய வேண்டும்' என்றான். 'அதற்கென்ன, செய்கிறேன்!' என்றேன். இதற்கு அவன் என்ன செய்தான் தெரியுமா? 'இன்றிரவு மகமதியன் வேடமிட்டு விஜயநகர மன்னரைக் கொன்றுவிடப் போகிறேன்' என்றான். 'அடப்பாவி! இந்துவாகப் பிறந்து இந்து சாம்ராஜ்யத் திற்குத் துரோகம் செய்கிறாயா?' என்று இரைந்து கூவினேள் நான். இதைக் கேட்டதும் அவன் சிரித்தான். சிரிப்பல்ல அது பெருமானே! சினம் கொண்ட மலைப் பாம்பின் பெருமூச்சு! உடனே அவன் 'கிழவா! என்னை இந்து என்ற நினைத்தாய்? நன்றாக என் முகத்தைப்பார்' என்றான். நான் நிமிர்ந்து பார்த்தேன். அவ்வளவுதான், கையிலிருந்த குத்தீட்டியால் என் கண்களைக் குத்திவிட்டு ஓடி விட்டான்! அந்த வேதனையுடன் அவனை எட்டிப் பிடித்தேன். அவனது இருப்பிலிருந்த ஓலை மட்டும் என் கையில் சிக்கிவிட்டது. இதோ இருக்கிறது அந்த ஓலை" என்று கூறி கருப்பட்டிக் கவிஞன் ஓலையை மன்னர் முன் தடுமாறிக்கொண்டே ஒப்படைத்தான். அவன் ஊர்ந்த பாதை நெடுக ரத்தம் சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருந்தது.

பனிமலர் போல் நனைந்திருந்த கண்களுக்கு ஓலையின் சாரத்தைப் புரிந்துகொள்ளும் சக்தி இல்லை; குரலில் தடுமாற்றம் இருந்தது.

அன்புள்ள ராஜாக் கிளிக்கு,

நீவிர் இத்தனை ஆண்டுகாலமாக விஜய நகரில் பீஜப்பூர் ஒற்றனாக இருந்தும் இதுநாள்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/28&oldid=1507359" இலிருந்து மீள்விக்கப்பட்டது