பக்கம்:துங்கபத்திரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

புலவர்கள் மன்னனின் அழைப்பிற்கிணங்க அவசரக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

பெரும் புலவர் பெத்தன்னா மன்னரின் விருப்பத்தை வழி மொழிந்து பேசினார். மகாமண்டலேசுவரருக்கு வரவேற்பளித்துக் கௌரவிக்க வேண்டுமென்று பேசினார். மன்னரின் பொன் முகத்தில் புன்முறுவல் அரும்பி நின்றது. ஆனால் அது நிலைக்கவில்லை. புலவர் துர்ஜதி பேச எழுந்தார்.

"நாம் மதுரையை வெற்றி கொண்டது கடினமான காரியமல்ல. நாகம நாயக்கருக்கு இது எளிதான காரியம். மதுரை வெற்றியை நாம் பெரிதாக மதித்தால் – அதற்கென ஒரு வெற்றி விழா கொண்டாடினால் – எதிரிகள், குறிப்பாக வடநாட்டு வேந்தர்கள் நம்முடைய பலத்தை தவறாகக் கணக்குப் போடுவார்கள்! இலுப்பைப் பூவா நமக்குச் சர்க்கரை? மன்னர்பிரானை எனது மாற்று யோசனையை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். அடுத்த திங்களில் விஜயநகரப் பேரரசின் இரண்டாவது நூற்றாண்டின் நிறைவு விழா வருகிறது. முதல் நூற்றாண்டுத் திருநாள் நம் நாட்டின் தேசீயத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டதாக ஏடுகள் கூறுகின்றன. அந்தக் காலத்தில் விஜயநகரம் பலம் பெறவில்லை. நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லாமல் இருந்தது. பூசல்கள் தலைவிரித்தாடிக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. இப்போது நாம் அப்படியல்ல. விஜய நகரம் இன்று ஒரு வலிமை மிக்க பேரரசு. நமக்கு வாய்த்திருக்கும் மன்னர் – தெய்வம் போல் வந்த துணைவர். அவருடைய காலத்திலே கொண்டாட இருக்கும் இரண்டாவது நூற்றாண்டு விழா உலகத் திருவிழாவரகத் திகழ வேண்டும். அந்த விழா வந்து கொண்டிருக்கிறது. விஜய நகர மண்ணில் தோன்றிய ஒவ்வொரு வீரனின் ரத்தத்திலும் ஊறிப்போயிருக்கும் மல்யுத்த வெறி இப்போது முதற்கொண்டே தலைதூக்கித் திரியத் தொடங்கிவிட்டது. நகரில் எங்கு பார்த்தாலும் மல்யுத்தப் பயிற்சிகள் நடை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/57&oldid=1509804" இலிருந்து மீள்விக்கப்பட்டது