பக்கம்:துங்கபத்திரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

விட்டார். சிறப்பான ஏற்பாடுகளெல்லாம் துரிதமாகத் தயாராகி வருகின்றன. விழாவில் போட்டிகளுக்கு குறை வில்லை. அதிலும் ஒரு சிறப்பு ! இதுவரை எந்த நாட்டிலும் வைத்திராத ஒரு புதிய பரிசைத் தர நமது அரசாங்கம் முடிவெடுத்து விட்டது. விஜயநகரப் பேரரசின் கீர்த்திக்கு உத்திரவாதமாக விளங்கும் மல்யுத்தப் போட்டிதான் விழாவில் பிரதானமானது. போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்குப் பொன்மட்டும் அல்ல, பொருள் மட்டும் அல்ல, பெண்ணும் கொடுக்க நமது மன்னர் தீர்மானித்து விட்டார்." அரியநாதன் பேசினான்.

விசுவநாதனின் மெய் சிலிர்த்கது.

"ஆம் விசுவம்! மல்யுத்தப்போட்டியில் வெற்றி பெற்றவன், விஜயநகர சாம்ராஜ்ஜியத்தில் திருமணமாகாத எந்தக் குமரிப்பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளலாம். போட்டியில் திருமணமாகாத விஜயநகரப் பிரஜைதான் கலந்து கொள்ளலாம். விசுவம், நாடே உன்னைத்தான் எதிர்பார்க்கிறது ! மன்னர்பிரான் கூட உன் பெயரைத்தான் குறிப்பிட்டார். விகவநாதன் காலத்தில் அவனை வேறொருவர் மல்யுத்தத்தில் வெற்றி கொள்வதை நாம் விரும்பவில்லை என்று மன்னரே வாய்விட்டுக் கூறினார். இத்தகவலைத் தெரிவிக்கத்தான் நான் ஓடோடி வந்தேன். நாள் நெருங்கி விட்டது. வெகு தூரமில்லை. ஓய்வில் பயிற்சி செய். வெற்றி உனக்குத்தான் கிடைக்க வேண்டும். நீ இதில் தோற்றால் எதிரிகள் ஏற்றங்கொண்டு விடுவார்கள். சிங்கராயன் பழிதீர்க்க நினைப்பான். அவன் கூட இந்தப் போட்டியில் கலந்து கொள்வதாகக் கேள்வி. கவனமிருக்கட்டும்! நான் புறப்படட்டுமா? மன்னர் தனிமையில் உறங்கிக் கொண்டிருக்கிறார். காவலர்கள் என்னைச் சந்தேகிக்காமல் இருக்கட்டும் என்பதற்காகவே நான் மன்னர் குதிரையில் வந்தேன். என்னைக் கண்டதும் மன்னர்தாள் நகர்வலம் போகிறார் என்று எண்ணிக் கொண்டு அவர்கள் இருந்து விட்டார்கள்." —- என்று கூறி, அரியநா தன் திரும்பினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துங்கபத்திரை.pdf/69&oldid=1524562" இலிருந்து மீள்விக்கப்பட்டது